நமது நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட சில குழப்பங்களால் பலிவாங்கப்பட்ட ஒரு உயிருக்காக நமது சமுதாயமே கொந்தளித்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில் இது போன்ற ஒரு கல்வி முறை பிரச்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் தான் 'பாடம்'.
இயக்குனர் ராஜேஷுக்கு உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ள ராஜசேகர் 'பாடம்' படத்தை இயக்கியுள்ளார். 'Rollon Movies' சார்பில் .ஜிபின் இப்படத்தை தயாரித்துள்ளார். கதாநாயகனாக புதுமுகம் நடிகர் கார்த்திக்கும் கதாநாயகியாக புதுமுக நடிகை மோனாவும் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் பள்ளி மாணவர்களாக இப்படத்தில் நடித்துள்ளனர் . நடிகர் விஜித் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாடம்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் ராஜசேகர் பேசுகையில் , ''சமீபத்தில் கூட ஒரு உயிரை பறித்த ஒரு முக்கிய சமுதாய பிரச்னையை பற்றி தன் 'பாடம்' பேசும். தமிழ் மீடியத்தில் படிக...
‘த பட்ஜெட் பிலிம் கம்பெனி’யின் வெளியீடான ‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டு பேசினார் இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன்.
அவர் பேசும் போது, ‘‘இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநரும், இந்தப் படத்தின் கதாநாயகனுமான திரு.செந்தில் செல்.அம் . அவர்கள் என்னை பெங்களூருவில் சந்தித்து சொல்லும் போதே, ‘முதல்முறையாக திரைப்படம் தயாரித்திருக்கிறேன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன்’ என்றார்.
எனக்குப் படத்தை போட்டும் காண்பித்தார். படம் எனக்குப் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷமாக உணர்ந்தேன். ஏனென்றால் எங்கள் வீட்டில் நான், அக்கா, இரண்டு தம்பிகள் என நான்கு பேர் உள்ள குடும்பம். அப்பா இல்லாததால் அம்மா தான் கிடைக்கிற வேலைக்கெல்லாம் சென்...
தொழில் பக்தியுடன் செய்யும் தொழிலை ரசித்து, அனுபவித்து செய்வதனாலேயே வெற்றியாளர்கள் மற்றவர்களிலிருந்து வேறுபடுகின்றனர். பிஜி தீவில் முழு வேகத்துடன் நடந்துவரும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ;பார்ட்டி' படத்தின் படப்பிடிப்பில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான 'பார்ட்டி'யில் நடிகர் சத்யராஜ் அசத்தியுள்ளார் என கூறப்படுகிறது. என்றுமே இளமையான துள்ளலோடு இருக்கும் சத்யராஜ் தனது நடிப்பாற்றலால் ஒட்டுமொத்த படக்குழுவையே அசத்தியுள்ளார். இவர் இப்படத்திற்கான தனது 40 நாள் இடைவிடாத படப்பிடிப்பினை முடித்து சென்னை திரும்பியுள்ளார். இவரது நடிப்பையும் அர்ப்பணிப்பையும், மற்றவர்களை ஊக்குவிப்பது பற்றியும் 'பார்ட்டி' படக்குழுவே புகழாரம் சூட்டிவருகிறது. இவரது நடிப்பு வாழ்க்கையின் சிறந்த நடிப்பாற்றல்களில் இப்படம் இடம் பெரும் என கூறப்படுகிறது.
இயக்குனர...
விவசாயிகளை கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை.
சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த விவசாயத்தையும்,வேலை செய்ய முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாய மக்களையும் கண்டு அதிர்ச்சியுற்றேன்.
இந்த பசுமை இன்னும் சில வருடங்களில் பாலைவனமாகிவிடும். இந்த விவசாய மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழே தள்ளப் பட்டு மாண்டுவிடும் அபாயம் இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்களின் நில ஆக்கிரமிப்பால் மக்கள் குடி நீரைக் கூட சுத்தமாக குடிக்க முடியாமல் இருக்கிறார்கள். நானே அங்கு தண்ணீரை போரில் அடித்து குடித்த போது எண்ணெய் நாற்றம் பெட்ரோல் வாடை குமட்டுகிறது இதில் எப்படி விவசாயம் செய்ய முடியும்,குடிக்க முடியும், விவசாய உற்பத்திகள் என்ன ஆவது, சுற்றுச்சூழல் மாசுபட்...
விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி
கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “
விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். மற்றும் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.
இசை - எஸ்.எஸ்.தமன்
ஒளிப்பதிவு - சுகுமார்
பாடல்கள் - கபிலன், விவேக், விஜய்சந்தர்
கலை - மாயா பாண்டியன்.
எடிட்டிங் - ரூபன்
நடனம் - பிருந்தா, தஸ்தாகீர்
ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன்
தயாரிப்பு நிர்வ...
ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் ! துப்பறிவாளன் படத்தின் தியேட்டர் வசூலில் விஷால் உதவி!
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பதவியேற்பு விழாவில்,
ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் தமிழகத்திலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் வசூலிக்கப்பட்டு வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று தமிழ் திரைப்படம தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவித்தார். அதன்படி விஷால் தயாரித்து, நடித்து வெளியாகும் 'துப்பறிவாளன் ' படத்தின் திரையரங்கு வருமானத்தில் இருந்து ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வறுமையில் உள்ள விவசாயிகள் குடும்ப நலனுக்காக கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். தமிழ் நாட்டில் 350க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பறிவாளன் திரையிடப்படுகின்றது. அதில் எத்தனை காட்சிகள் நடைபெறுகின்றதோ,அத்தனை காட்சிகளிலும் விற்க்கப்படும் டிக்கெட்டுகளிலிருந்தும் ஒரு ரூபாய் வசூலித்து ...
சிவா மனசில புஷ்பா... திட்டமிட்டபடி ஷார்ப்பாக முடிந்தது படப்பிடிப்பு!
சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.
அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் வாராகியின் ஜோடியாக வருகின்றனர்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவுக்கும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரான பெண்ணுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு, சண்டைதான் இந்தப் படத்தின் கதை. ஒரு அரசியல்வாதி எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் வாராகி.
இந்தப் படத்தின் ஷூட்டிங் கடந்த மே மாதம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 40 நாட்களில் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. படத்தின் இறுதிக் காட்சிகள் சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த...
சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து
சசிகலா பொதுச் செயலாளர் நியமனம் ரத்து; தினகரன் அறிவித்த நியமனங்கள் செல்லாது உட்பட அதிமுக பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
01.கட்சியையும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
02.ஜெயலலிதா இறந்த போது, அவரவர் வகித்த பதவிகளில் தொடர்ந்து செயல்பட வேண்டும்.
03.எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்கு தமிழக அரசுக்கு பாராட்டுகள்
04.ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் தமிழக அரசுக்கு நன்றி
05.புயல், வெள்ளம், வறட்சி பணிகளில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு
06.ஜெ., மறைவுக்கு பிறகு எதிரிகளுக்கு இடம் தராமல் கட்சியை கட்டுகோப்பாக நடத்தும் நிர்வாகிகளுக்கு பாராட்டு
07.அதிமுகவில் பொது செயலர் பதவி ரத்து
08.சசிகலா வகிக்கும் தற்காலிக பொது செயலர் ம...