புதன்கிழமை, ஜூன் 24
Shadow

Author: Kodanki

விலை மாதுவாக தன்சிகா குறும்படம் “சினம்”

விலை மாதுவாக தன்சிகா குறும்படம் “சினம்”

செய்திகள்
மேற்கு வங்காளத்தில் வாழும் ஒரு விலை மாதுவை சந்திக்கிறார் ஒரு ஆவணப்பட இயக்குனர். அந்த பெண் அந்த தொழிலில் தள்ளப்பட்ட காரணத்தை அறிந்துக்கொள்ளும் இயக்குனர் இறுதியல் யாரால் அவள் இந்த நிலைக்குள்ளானாள் என்பதை கண்டு அதிர்ச்சியடைகிறாள். கதைப்படி இருவரும் பெண்னை கடவுளாக வணங்கும் மதத்தை சார்ந்தவர்கள். அண்டை மாநிலத்திலிருந்து வந்த பெண் எவ்வாறு இந்த நிலைக்கு தள்ளப்பட்டாள், ஒரு பெண் சமுகத்தில் எதிர்கொள்ளும் அன்றாட பிரச்சனைகளை விளக்கும் குறும்படம் "சினம்" விலை மாதுவாக தன்சிகாவும், ஆவணப்பட இயக்குனராக பெங்காலி நடிகை பிடிட்டா பேக் நடித்துள்ளனர். 25 நிமடங்கள் ஒடக்கூடிய இந்த குறும்ப்படத்தை லண்டனில் வசிக்கும் நேசன் திருநேசன் தயாரிப்பில், ஆனந்த் மூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது....
இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக எழுதி காட்சியாக வெளியிடுகிறார்

இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக எழுதி காட்சியாக வெளியிடுகிறார்

செய்திகள்
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா  இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆரின் சாதனைகளை பாடலாக எழுதி காட்சியாக வெளியிடுகிறார்   எம்.ஜி.ஆர் பிறந்து நூறாண்டு ஆகியுள்ள நிலையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்று திரையுலம் கொண்டாட இருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் பேரரசு எம்.ஜி.ஆர் சாதனைகள், மக்களிடத்தில் அவர் எப்படி இருந்தார். திரையுலகிற்கு அவர் ஆற்றிய பணி உள்ளிட்ட பல அம்சங்களை ஒரு பாடலாக தொகுத்து அதை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிட இருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் பேரரசு கூறும்போது, ‘எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் நான். இவர் மக்களுக்கும் கலைக்கும் செய்த சாதனைகள் பல. இவரைப் பற்றி ஏதாவது ஒன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போதுள்ள இளம் தலைமுறைகள் எம்.ஜி.ஆர். பற்றி பல விஷயங்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அதனால், எம்.ஜி.ஆர். பற்றி பலரும் அறிந்திராத செய்திகள், புகைப்படங்கள், சாதனைகள் ஆகி...
நமது விவசாயிகளை காப்பது நமது கடமை – தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சீ.வி.குமார்

நமது விவசாயிகளை காப்பது நமது கடமை – தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சீ.வி.குமார்

செய்திகள்
பல வெற்றி படங்களையும், பல வெற்றி இயக்குனர்களையும் தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் முலம் அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் சீ.வி.குமார். சமீப காலமாக விவசாயிகள் படும் துன்பங்களை கண்டு வருத்தமடைந்த சீ,வி.குமார் விவசாயத்திற்கான விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் அயல்நாட்டு குளிர்பானங்களை இனி நானும் என் தயாரிப்பில் உருவாகும் படங்களின் போதும் உபயோகிக்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். நமது விவசாயிகளையும், விவசாயத்தின் மகத்துவத்தயும் காப்பது நம் கடமை என கூறிய சீ.வி.குமார் எடுத்திருக்கும் இந்த முடிவு பொதுஜன மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான "அதே கண்கள்" படத்தின் இசை நாளை வெளியாகவுள்ளது குறிப்பிடதக்கது....
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் தீபன்..!

எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் தீபன்..!

செய்திகள்
பொன்மனச்செல்வன் புரட்சி தலைவர் டாக்டர் .எம் .ஜி .இராமச்சந்திரன் அவர்களின் 100வது பிறந்தநாளையொட்டி சென்னை கோடம்பாக்கம் எம்ஜிஆர் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் சிறப்பாக கொண்டாடினார்கள் . இப்பள்ளியின் செயலர் .தீபன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தார் .மற்றும் தியாகராய நகர் சட்டசபை உறுப்பினர் .சத்திய நாராயணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்...
சென்னையில் ஏன் பாலியல் தொழிலை சட்டப்படி அனுமதிக்கக் கூடாது?: புரியாத புதிர் தயாரிப்பாளர்

சென்னையில் ஏன் பாலியல் தொழிலை சட்டப்படி அனுமதிக்கக் கூடாது?: புரியாத புதிர் தயாரிப்பாளர்

செய்திகள்
மும்பையில் பாலியல் தொழில் சட்டப்படி செல்லும் என்கிறபோது சென்னையில் மட்டும் அப்படி ஏன் இல்லை என பட தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் கேள்வி எழுப்பியுள்ளார். செக்ஸ் கல்வியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் இன்னும் ரிலீஸாகாமலேயே உள்ளது. யுரேகா இயக்கத்தில் சான்ட்ரா ஏமி நடித்துள்ள இந்த படத்தை விஜய் சேதுபதியின் புரியாத புதிர் தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் தயாரித்துள்ளார். இது குறித்து சதீஷ் கூறுகையில், பிற பட வேலைகளில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால் சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. செக்ஸ் கல்வி மற்றும் நகரில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளை மையப்படுத்தி படம் எடுக்கப்பட்டுள்ளது. சிவப்பு எனக்கு பிடிக்கும் படம் குறித்து பலர் என்னை கேள்வி கேட்டார்கள். சிவப்பு என்பதில் ஒரு கருத்து உள்ளது என்று அவர்களுக்கு நான் விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது. படத்தில் சான்ட்ர...
நூற்றாண்டு விழா காணும் எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்….

நூற்றாண்டு விழா காணும் எம்.ஜி.ஆர் பற்றி சில சுவையான தகவல்கள்….

செய்திகள்
•எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936).கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977). •பெரும்பாலும் தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்’ மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வரராவ் நடித்த தெலுங்குப் படம் ! •எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி ! •எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் ‘அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிட உடைமையடா’ பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் ! •விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் ! •சிகரெட் பிடிப்பது மாதி...
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ விமர்சனம்

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ விமர்சனம்

விமர்சனம்
சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் பார்த்திபன். இவருக்கு ஒருநாள் வெளிநாட்டில் இருந்து வரும் சாந்தனுவின் அறிமுகம் கிடைக்கிறது. சாந்தனுவை பற்றி நன்கு தெரிந்திருக்கும் பார்த்திபன், அவரை தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பங்களாவில் தங்க வைக்கிறார். சாந்தனுவும் பார்த்திபனின் பேச்சில் மயங்கி, அவர் சொல்லும் இடத்திலேயே தங்க முடிவு செய்கிறார். அந்த பங்களாவில் பணிபுரியும் பார்வதி நாயரை பார்த்தவுடனே சாந்தனுவுக்குள் ஒருவித ஈர்ப்பு வந்துவிடுகிறது. அவளும் சாந்தனுவிடம் நெருங்கி பழக ஆரம்பிக்கிறாள். ஒருகட்டத்தில் பார்த்திபனின் மனைவிதான் பார்வதி நாயர் என்பது சாந்தனுவுக்கு தெரிய வருகிறது. பார்த்திபனின் வயதுக்கும், பார்வதி நாயரின் வயதுக்கும் ஒத்துப்போகாத நிலையில், இந்த திருமணம் எப்படி நடந்தது? என்று சாந்தனு கேட்கையில், அதற்கு பார்த்திபன், தான் சிறுவயதிலிருந்தே பார்வதி நாயர...
பைரவா விமர்சனம்

பைரவா விமர்சனம்

விமர்சனம்
ஒய்.ஜி.மகேந்திரன் மேனேஜராக பணிபுரியும் தனியார் வங்கியில், வராத கடன் தொகையை வசூலித்து கொடுப்பவராக பணிபுரிந்து வருபவர்தான் விஜய். இவருடன் சதீஷும் சேர்ந்து அதே பணியை செய்து வருகிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிபாரிசின் பேரில் வங்கியில் வாங்கிய ரூ.64 லட்சம் பணத்தை மைம் கோபி அந்த பணத்தை திருப்புக்கொடுக்க முடியாது என்று அவரை ஏமாற்றி விடுகிறார். இதனால் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பெரிய சிக்கல் ஏற்படுகிறது. அவரது மகளின் திருமணமும் நடக்கவுள்ளதால், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண விஜய்யின் உதவியை நாடுகிறார். விஜய்யும் மைம் கோபியை அடித்து துவம்சம் செய்து ஒய்.ஜி.மகேந்திரனுக்கு வரவேண்டிய பணத்தை மீட்டு கொடுக்கிறார். அதன்பின்னர், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் திருமணம் நடக்கிறது. அந்த திருமணத்திற்கு மணப்பெண்ணின் தோழியான கீர்த்தி சுரேஷ் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு வருகிறாள். கீர்த்தி சுரேஷை பார்த்ததும் அவள்மீது காதல்...
வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

வியாபார தளமாக மாறிய  ICAF நடத்தும் 14 வது உலக திரைப்பட விழா !

சினி நிகழ்வுகள், செய்திகள்
  சென்னையில்  ஆரம்பத்தில் பெரிய அளவில் விளம்பரதாரர்கள் இல்லாத சமயத்திலும், அரசின் உதவிகளும் இல்லாத நிலையிலும், ஆனந்த் திரையரங்கம், பைலட் திரையரங்கம், போன்ற இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது, உலக திரைப்பட விழா ! படங்களின் தேர்வுகளும் பாராட்டலாம். டிசம்பர் இறுதியில் நடைபெற வேண்டிய நிகழ்வு புரட்சித் தலைவி மறைவாக தள்ளி வைத்து, தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் சில சிறமங்களை சந்தித்துள்ளதாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதே சமயத்தில், காசினே போன்ற திரையரங்குகளில் ( நிர்வாகப் பணிகள் உட்பட ) திரைப்பட விழா நடைபெறுவது வருத்தம் அளிக்கிறது. வடபழனியில் உள்ள பலாசாவில் தினமும், பலர் அவமதிக்கப்படுகின்றனர். விழா குழுவினர் அதை ஒழுங்குபடுத்த வேண்டும். ஆர்.கே.வி ஸ்டுடியோஸ் ஆறுதல் என்றே சொல்லலாம், நன்றி. இந்த முறை சரியான படங்களையும் தேர்வு செய்யவில்லை, குறைந்த அளவே நல்ல...