“தமிழர்களால் பெருமை படுகிறோம்” பொங்கல் வாழ்த்து தெரிவித்த இங்கிலாந்து பிரதமர் தெரசா மே..!
"தமிழர்களால் பெருமை படுகிறோம்" இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடி வரும் நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
https://twitter.com/search?q=Theresa%20May%20pic.twitter.com%2FfWnUus4Wip&src=typd
தெரசா மே தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
அவர் பேச துவங்கும் முன் தமிழில் வணக்கம் என்று சொல்கிறார். அதனை தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் உலக முழுவதிலும் உள்ள தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். இங்கிலாந்து வளர்ச்சிக்கு மிகுந்த பங்காற்றியுள்ளனர். தமிழர்களால் தாங்கள் பெருமை படுகிறோம். வரும் ஆண்டு...









