சினிமாகாரர்களின் சிம்மசொப்பனம் சுரேஷ்காமாட்சியின் ‘மிக மிக அவசரம்’
தமிழ் சினிமா பிரபலங்கள் முதல் சினிமா தொழிலில் இருக்கிற பெரும்பாலானோருக்கு சமீபத்திய பரிச்சையமான பெயர் எது என்றால் சுரேஷ் காமாட்சி.
நடிகன் தவறு செய்தாலும், தயாரிப்பாளர் சிக்கல் ஏற்படுத்தினாலும், தியேட்டர்காரர்கள் பஞ்சாயத்து என்றாலும் பொது மேடையில் அவர்களை வெளுத்து வாங்குவது தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியின் வழக்கம்.
வெறும் பரபரப்புகள் மட்டுமல்லாமல் தனது பேச்சில் நியாயமான வழிகளையும் சொல்லிவருவதால் சினிமா உலகில் வெகு சீக்கிரத்தில் பிரபலமாகியிருக்கறார் சுரேஷ்காமாட்சி.
அமைதிப்படை 2, கங்காரு என இரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இப்போது ‘மிக மிக அவசரம்’ என்ற படத்தை இயக்கி நடிக்கவும் செய்கிறார்.
இயக்குநர் சுரேஷ் காமாட்சியுடன் ஒரு நேர்காணல்...
தயாரிப்பாளராக இருந்து இயக்குநராக மாறியது ஏன்?
முதலில் நான் ஒரு உதவி இயக்குநராகத்தான் இருந்தேன். இயக்குநராக வேண்டும் என்பதுதான் என் நோக்கமும் கூட. அமர...
