Author: Kodanki
ரஜினி மகள் சவுந்தர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்..!
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் கணவர் அஸ்வின் ராம்குமார் இருவரும் பரஷ்பரம் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவு.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா, இவருக்கு சென்னை சேர்ந்த் தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமார் இருவருக்கும் கடந்த 2010 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு வேத் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
திருமணத்திற்கு பின்னர் சினிமா படம் தயாரிப்பில் சௌந்தர்யா ஈடுபட்டார். அவர் தயாரிப்பில் கோவா என்ற திரைப்படம் வெளிவந்தது.
இதற்கிடையே, அஸ்வின் - சௌந்தர்யா தம்பதியிடையே முதலில் திருமண உறவில் கருத்து வேறுபாடுகள் எற்பட்டது. இதனை அடுத்து சின்ன, சின்ன சண்டைகள் நடைபெற்றதாக கூறப்படுகின்றது. அதைச் சரி செய்ய ரஜினி குடும்பத்தின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு அறிவுரை கூறி வந...
காமெடியன் பேரன் வில்லன் ஆகும் “நான் யாரென்று நீ சொல்”
ஸ்ரீ மணிமேகலை கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாகP.மணிமேகலை தயாரிக்கும் படத்திற்கு " நான் யாரென்று நீ சொல்" என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கீர்த்திதரன் கதானாயகனாக நடிக்கிறார்.
கல்கண்டு படத்தில் நாயகனாக அறிமுகமானவர் கஜேஷ். நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமானா இவர் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நெகடிவ் வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக சுரேகா அறிமுகமாகிறார்.
அம்மா வேடத்தில் சோனா நடிக்கிறார். மற்றும் ஆனந்த்பாபு பாண்டு கராத்தேராஜா மாறன் ஆகியோர் நடிக்கிறார்கள்.எழுதி இயக்கி இருப்பவர் A.M.பாஸ்கர்.
பிரபல நடிகையான லஷ்மிராயை சினிமாவில் குறுக்கெழுத்து என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இவர் தான்.
அவரிடம் நான் யாரென்று நீ சொல் படம் பற்றி கேட்டோம்...
சோனாவின் மகள் சுதா ஐ.டி நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறாள். அதே நிறுவனத்தில் வேலை செய்யும் கஜேஷ் மற்றும் பேக்கரி தொழில...
உறுதிகொள் பட விழாவில் கமலை வம்புக்கிழுத்த மன்சூர்..!
APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் " உறுதி கொள்"
கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் இசை விழாவில் பரபரப்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது...
கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால்GST மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு APP.துவங்கி அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும் என்று ஆரி பேச.
தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு..அது தான் சினி...
ஜூலை 12ம் தேதி பெட்ரோல் பங்க் ஸ்டிரைக்..!
பெட்ரோல் பம்ப்களில் தானியங்கி தொழில்நுட்பத்தை ஏற்படுத்தாத பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களை கண்டித்து, ஜூலை, 12ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன.
இது குறித்து அகில இந்திய பெட்ரோல் டீலர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினசரி மாற்றம் செய்யப்படும் என்ற முடிவுக்கு நாங்கள் துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். இதில் வெளிப்படைதன்மை இல்லை என்பது எங்களின் எண்ணமாக உள்ளது.மேலும், தானியங்கி தொழில்நுட்ப வசதி, 100 சதவீத பெட்ரோல் பங்க்குகளிலும் பொருத்தப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்தன. அதை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, ஜூலை, 5ம் தேதி பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதில்லை என்றும், ஜூலை, 12ம் தேதி நாடு முழுவதும் அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் என்றும் முடிவு செய்துள்ளோம்....
எவனவன் – விமர்சனம்
சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார்.
இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும...
அதாகப்பட்டது மகாஜனங்களே – விமர்சனம்
அப்பாவியான நாயகன் உமாபதி கிதார் வாசிப்பதில் வல்லவர். இதனால், அவரது அப்பா பாண்டியராஜன் தன்னுடைய அப்பாவின் நினைவாக உமாபதியின் புகைப்படத்துடன் அவரது முழு விவரம் அடங்கிய கிதார் ஒன்றை அவருக்கு பரிசாக அளிக்கிறார். இந்நிலையில், நாயகனின் நண்பர் பெரிய தொழிலதிபரான நரேனின் வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். அவர், நாயகனுக்கு போன் செய்து தனக்கு குழந்தை பிறந்துள்ளதாகவும், தான் அவசரமாக அங்கு செல்லவேண்டும் என்பதால், நான் வரும்வரை என்னுடைய வேலையை நீ பார்க்கவேண்டும் என்று நாயகனிடம் கெஞ்சுகிறார்.
நாயகனும் மனமிறங்கி, அந்த வீட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார். வேலைக்கு வந்த சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிடுகிறார். மயக்கம் தெளிந்தபோது அந்த வீட்டில் அனைவரும் மயங்கிய நிலையில் கிடக்கிறார்கள். இதைப் பார்த்ததும் தன்னுடைய நண்பனுக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்கிறார் நாயகன். நண்பரும் என்னால் நீ மாட்ட...
ஜிஎஸ்டி பெயரில் கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை – நிதியமைச்சர் ஜெயக்குமார்
ஜிஎஸ்டி வரி எனக் கூறி கடைகளில் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அபிராமி ராமநாதன் தலைமையிலான திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று நிதி அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ராமநாதன், கேளிக்கை வரி தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசித்து நல்ல முடிவை அறிவிப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ’திரையரங்கங்களுக்கான கேளிக்கை வரியை குறைப்பது தொடர்ப...
ஜி.எஸ்.டிக்கு எதிராக டி.ஆர். நாளை ஆர்ப்பாட்டம்..!
ஜி.எஸ்.டிக்கு எதிராக ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் டி.ஆர், நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்.சேம்பர் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கையில், “ மத்திய அரசின் ஜி.எஸ்.டியும் 30% கேளிக்கை வரியும் சேர்ந்தால் தமிழ்த்திரையுலகம் முற்றிலும் அழிந்துவிடும். ஆகவே, தமிழ் சினிமாவை
இந்த இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்ற சினிமாவை நேசிக்கும், சினிமாவைக் காப்பாற்றத்துடிக்கும் அத்துனை சினிமா கலைஞர்களும்.நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.
சினிமாவை நம்பி வரும் இளைஞர்கள் மற்றும் புதிய திறமைகளுக்கு உத்திரவாதமான சூழ்நிலையை ஏற்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் காப்பாற்றும் பொறுப்புடன் நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளவேண்டும்..” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் இணையதள உடகவியலா...

