வியாழக்கிழமை, ஜூலை 16
Shadow

Author: Kodanki

4 நாட்களில் வண்டலூர் பூங்காவை  ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்!

4 நாட்களில் வண்டலூர் பூங்காவை ஒரு லட்சம் பேர் பார்வையிட்டனர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 14-ந்தேதி முதல் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா இடங்களுக்கு அதிக அளவில் சென்று வந்தனர். காணும் பொங்கலையொட்டி நேற்று வண்டலூர் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, மாமல்லபுரம், பழவேற்காடு பகுதியில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய சுற்றுலா இடமாக வண்டலூர் பூங்கா உள்ளது. பொங்கல் தொடர் விடுமுறையால் வண்டலூர் பூங்காவில் கடந்த 4 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கடந்த 4 நாட்களில் வண்டலூர் பூங்காவை 1 லட்சம் பேர் பார்த்து ரசித்து உள்ளனர். நேற்று மட்டும் 31 ஆயிரம் பேர் குவிந்து இருந்தனர். இது தொடர்பாக வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- காணும் பொங்கல் பண்டிகையினை கொண்டாட வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூ...
நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

நடிகை அமலா பாலுக்கு கேரளாவில் குருவாயூர் கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகைகள்
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இக்கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து கேரளா முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இக்கோவிலுக்கு சென்றனர். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான அமலா பாலும் நேற்று முன்தினம் உறவினர்களுடன் இக்கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்து விட்டனர். அமலா பால் மாற்று மதத்தவர் என்பதால் அவரை கோவிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்து விட்டது. இதனால் மனம் வருந்திய நடிகை அமலா பால், கோவிலுக்கு வெளியே நின்றபடி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வரு...
விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்பின்போது பலத்த காயம்!

விஜய் ஆண்டனிக்கு படப்பிடிப்பின்போது பலத்த காயம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது இன்னொரு படகில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வாய்ப்பகுதி சேதம் அடைந்து பற்கள் உடைந்தன. சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்க போன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல்நிலை தேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி இன்று (புதன்கிழமை) லங்கா தீவில் இருந்து வி...
ஜெயம் ரவி – நயன்தாரா நடிக்கும் இறைவன்!

ஜெயம் ரவி – நயன்தாரா நடிக்கும் இறைவன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  *பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் & G. ஜெயராம் வழங்கும் 'ஜெயம்' ரவி, நயன்தாரா நடிப்பில், I. அஹமத் இயக்கத்தில் 'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வை வெளியீடு* பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் ஆகியோர் அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் பாராட்டத்தக்க பொழுதுபோக்கு படங்களை உருவாக்கியுள்ளனர். நம்பிக்கைகுரிய நிறைய படங்கள் தயாரித்து இருந்தாலும் இந்த வருடம் 2023-லும் வித்தியாசமான கதைக்களங்களை கைவசம் வைத்திருக்கின்றனர். அதில், I. அஹமது இயக்கத்தில் 'ஜெயம்' ரவி- நயன்தாரா நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் 'இறைவன்' திரைப்படமும் ஒன்று. இதன் டைட்டில் மற்றும் முதல் பார்வையை ஹேண்ட்ஸம் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ளார். படம் குறித்து தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் பேசியதாவது, "'இறைவன்' படத்தின் டைட்டில் & முதல் பார்வையை வெளியிடுவதில்...
விஜய் படத்தில் நடித்து “சிறந்த துணை நடிகர் விருது” வென்ற மாஸ்டர் மகேந்திரன்!

விஜய் படத்தில் நடித்து “சிறந்த துணை நடிகர் விருது” வென்ற மாஸ்டர் மகேந்திரன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  மாஸ்டர் படத்திற்காக ‘சந்தோஷம்’ சிறந்த துணை நடிகர் விருதை வென்ற மாஸ்டர் மகேந்திரன்!! தமிழ் சினிமாவில் இளம் நடிகரான மாஸ்டர் மகேந்திரன் ஆந்திர முன்னணி இதழ் வழங்கும் சந்தோஷம் விருதுகளில், சிறந்த துணை நடிகருக்கான விருதை ‘மாஸ்டர்’ படத்திற்காக பெற்றுள்ளார். நாட்டாமை படத்தின் மூலம் தமிழக மக்களின் மனங்களில் அழுத்தமான இடத்தைப் பிடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது தமிழில் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவருக்கு தளபதி விஜய்யின் “மாஸ்டர்” படத்தில் நடித்த கதாப்பாத்திரம், பெரும் புகழை பெற்றுத்தந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ‘மாஸ்டர்‘ படத்தில் விஜய் சேதுபதியின் இள வயது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார் மாஸ்டர் மகேந்திரன். இந்த பாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. பெரும் ப்ளாக்பஸ்டரா...
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் இணைந்து நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ வலைதள தொடரின் முன்னோட்டம் வெளியீடு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அமேசான் பிரைம் வீடியோவின் அசல் தொடரான 'ஃபார்ஸி', பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் இந்தியாவிலும், 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ள இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது. அவர்களுடன் இந்தத் தொடரில் திறமை மி...
வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

வேல்ஸ் திருவிழாவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட ‘P T சார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் புதிய படத்திற்கு 'பி.டி. சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள வேலன் அரங்கத்தின் முன் அமைக்கப்பட்டிருந்த திறந்த வெளி கிராமிய திருவிழா அரங்கத்தில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர்கள் பொங்கல் திருவிழாவை கொண்டாடிய தருணத்தில், வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை பிரம்மாண்டமான முறையில் வெளியிடப்பட்டது. படத்திற்கு 'P T சார்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. 'வேல்ஸ் திருவிழா'வில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே. கணேஷ், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் பெற்ற முனைவரும், நடிகருமான ...
‘வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா!

‘வெள்ளிமலை’ ட்ரைய்லர் வெளியீட்டு விழா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இயக்குநர் ஓம் விஜய் இயக்கத்தில் சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கக்கூடிய 'வெள்ளிமலை' படத்தின் ட்ரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பேரரசு, கே.எஸ். ரவிக்குமார், சீமான் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது, “இந்தப் படத்தைப் பார்க்கும்போது என்னுடைய முதல் படம் வந்தது போல எளிமையாக உள்ளது. இந்தப் படத்தில் நடித்த சுப்ரமணி என் மனதுக்கு நெருங்கிய நண்பர். ’பிசாசு’ உட்பட என்னுடைய பல படங்களில் நடித்திருப்பார். இயக்குநரை நான் பார்த்தபோது வேட்டியுடன் வந்திருந்தார். தயாரிப்பாளர் படித்து முடித்து சம்பாதித்த பணத்தை சினிமாவில் கொண்டு வந்தார். அவருக்கு பாராட்டுகள். இந்த வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கிறது. எப்படி வாழ்ந்து தீர்ப்பது எனத் தெரியவில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் திரையரங்குதான். அதனால், இந்த...
‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

‘துணிவு’ திரைப்படத்தை தமிழ் ரசிகர்களுடன் பார்க்க விரும்பும் நடிகை மஞ்சு வாரியர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான, அஜித் குமார் மற்றும் 'அசுரன்' படப் புகழ் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் தயாரான, 'துணிவு' திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் டோலிவுட், சாண்டல் வுட் என தென்னிந்தியா முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்படத்தில் கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர், கேரளாவில் உள்ள வனிதா சினி பிளக்ஸில் முதல் நாளில் ரசிகர்களுடன் படத்தை கண்டு ரசித்தார். இதன் பிறகு அவர் பேசுகையில், '' முதல்முறையாக திரையரங்கில் முழு படத்தையும் ரசிகர்களுடன் பார்...