வெள்ளிக்கிழமை, ஜூலை 17
Shadow

Author: Kodanki

25ந் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது!

25ந் தேதி நிகழும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தீபாவளி பண்டிக்கைக்கு மறுநாள் வரும் 25-ந் தேதி சூரிய அஸ்தமனத்துக்கு முன், பகுதி நேர சூரிய கிரகணம் நிகழும் என்றும், இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் இதை பார்க்க முடியும் என்று மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், வடகிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளிலிருந்து இந்த கிரகணத்தை பார்க்க முடியாது. கிரகணம் முடிவடைவதை சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு காண முடியாது. அதிகபட்ச கிரகணத்தின்போது வடமேற்கு பகுதிகளில் சந்திரன் சூரியனை மறைக்கும் நிகழ்வு சுமார் 40 முதல் 50 சதவீதம் வரை இருக்கும். கிரகண உச்சத்தின்போது டெல்லி மற்றும் மும்பையில் சந்திரன் சூரியனை மறைப்பது முறையே 44 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை இருக்கும். சென்னை மற்றும் கொல்கத்தாவில் கிரகணம் ஆரம்பம் முதல் சூரியன் மறையும் நேரம் வரை முறையே 31 நிமிடம் மற்றும் 12 நிமிடங்களாக இருக்கும். இந்த சூரிய ...
டி20 உலகக் கோப்பை- இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதல்!

டி20 உலகக் கோப்பை- இந்திய அணி 2-வது பயிற்சி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்துடன் மோதல்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகளும் அந்த பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் வரும் 23-ந் தேதி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. அதற்கு முன்னதாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. நேற்றைய முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்தது. 2-வது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேன் மைதானத்தில் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நியூலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி நம்பிக்கையுடன் விளையாட முடியும் என கருதப்படுகிறது. முன்னதாக குரூப்-1 பிரிவில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து அணி முதல் பயிற்சி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வ...
நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

நயன்தாரா விவகாரம்: அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை – அமைச்சர் பேட்டி!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். திருமணமான நான்கே மாதத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது பல கேள்விகளை எழுப்பியது. அதன்பின்னர் வாடகைத் தாய் மூலம் அவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரிய வந்தது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுக்க பல்வேறு விதிமுறைகள் இருக்கும் நிலையில், இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்தது. இதுகுறித்து நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இதையடுத்து 4 பேர் கொண்ட சுகாதாரத்துறை குழுவினர் விசாரணை நடத்தினர். இதையடுத்து விசாரணைக் குழுவிடம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றதற்கான ஆதாரங்களை நயன்தாரா - விக்...
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம் – ரோகித் சர்மா!

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு சிறப்பாக தயாராகி உள்ளோம் – ரோகித் சர்மா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
டி 20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் வரும் 23-ம் தேதி மோதுகிறது. இந்நிலையில், 16 அணிகளின் கேப்டன்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு நாங்கள் சிறப்பாக தயாராகி விடுவோம். அப்போட்டியில் யார் விளையாட போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். கடைசி நிமிடத்தில் யாரிடமாவது நீங்கள் விளையாடுகிறீர்கள் என்று சொல்வதை நான் விரும்பவில்லை. காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதி. அதை எதுவும் செய்ய முடியாது. நிறைய போட்டிகளில் விளையாடும் போது காயம் ஏற்படும். எங்களது கவனம் அணியை வலுப்படுத்துவதில் உள்ளது. அதனால்தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறோம். பு ம்ரா காயம் பற்றி நிபுணர்களிடம் பேசினோம். உலக கோப்பை போட்டி முக்கியம். ஆனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முக்கியமானது...
ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை உண்டாக்கிய சர்தார் பட டிரைலர்!

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்பை உண்டாக்கிய சர்தார் பட டிரைலர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்தார் படக்குழு, வடபழனியில் உள்ள பிரபல மாலில் படத்தின் டிரைலரை வெளியிட்டனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து வந்த திரைப்படம் "சர்தார்". கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. நடிகர் சூர்யா வெளியிட்ட டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வரும் போது  படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழுவினர் உறுதிப்படுத்தினர். சர்தார் திரைப்படம்  தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21 ஆம் தேதி அன்று வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினர். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும்  திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகும் என்றும் இதில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது என்பதையும் உறுதிப்படுத்தினர். பொன்னியின் செல்வன் வெற்றிக்கு ...
இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இயக்குனர் சீனு ராமசாமிக்கு இன்ப அதிர்ச்சி தந்த முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்துணையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர். இந்நூலுக்கு வாழ்த்துமடல் மாண்புமிகு நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளித்து பாராட்டி ஒரு கடிதம் தந்து வாழ்த்திய உங்கள் உயர்ந்த உள்ளம் பற்றி நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதல்வரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.. கவிஞரும் தன் பங்களிப்பாக ஆய...
இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி!

இயற்கைக்கும், மனிதனுக்கும் பாலமாக காவல் தெய்வங்கள் உள்ளன – ‘காந்தாரா’ இயக்குநர் ரிஷப் ஷெட்டி!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையே பாலமாக நம்முடைய காவல் தெய்வங்கள் உள்ளன’ என காந்தாரா பட இயக்குநரும் நாயகனுமான ரிஷப் ஷெட்டி தெரிவித்தார். ‘கே ஜி எஃப்’ பிரம்மாண்டமான வெற்றிப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘காந்தாரா’. இதில் ரிஷப் ஷெட்டி, அச்சுத் குமார், சப்தமி கௌடா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் எஸ் காஷ்யப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் ஷெட்டி. கன்னட மொழியில் தயாராகி வெளியான இந்த திரைப்படம், விரைவில் நூறு கோடி ரூபாய் வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தமிழ் பதிப்பு அக்டோபர் 15 ஆம் தேதியான இன்று தமிழகத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்...
தமிழில் அறிமுகமாகும் தேசிய விருது பாடகி நஞ்சம்மா!

தமிழில் அறிமுகமாகும் தேசிய விருது பாடகி நஞ்சம்மா!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
கேரள மாநிலம் அட்டப்பாடி மலைக்கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சம்மா. பழங்குடி இனத்தை சேர்ந்த நஞ்சம்மா, கிராமிய பாடல்கள் பாடுவதில் வல்லவர். இது பற்றி அறிந்த கலை உலகினர், இவருக்கு 2020-ஆம் ஆண்டு வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' என்ற படத்தில் பாடல் பாட வாய்ப்பு அளித்தனர். அந்த படத்தில் இவர் 'கலக்காத சந்தனமேரம் வெகுவோக பூதிரிக்கும்' என்ற பாடலை பாடினார். படம் வெளியான பின்னர் இந்த பாடல் பட்டி, தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கியது. இதையடுத்து மத்திய அரசு இந்த பாடலை பாடியதற்காக சமீபத்தில் இவருக்கு சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை அறிவித்தது. இந்நிலையில், அவர் தமிழிலும் பாடகியாக அறிமுகமாக உள்ளார். 'ஆதாம்' என்ற மலையாள படத்தை இயக்கிய இயக்குனர் சமர் 'சீன் நம்பர் 62' என்கிற படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்தப்படத்தில் 'என் சேவல்' என்ற பாடலை பாடகர் வேல்முருகனுடன் இணைந்து நஞ்சம்மா பாடியுள்ளார்....
வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!

வெங்கட் பிரபு படத்திற்கு வந்த சிக்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாண்டியா மாவட்டம், மேலுகோட் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோவிலுக்கு அருகில் படக்குழு மதுக்கடை செட் ஒன்று அமைத்து படப்பிடிப்பு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோவிலுக்கு அருகில் விதிகளை மீறி செட் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர் அந்...
பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் பிறந்த நாளுக்கு வித்தியாசமாக வாழ்த்திய பட குழு!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
பாலிவுட் திரையுலகின் மெகா ஸ்டார் அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்தநாளான நேற்று, 'புராஜெக்ட் கே' படக்குழுவினர் பிரத்யேகமான போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'புராஜெக்ட் கே'. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். தயாரிப்பில் இருக்கும் இந்த படத்தில் பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பிரபல தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரித்து வருகிறார். நேற்று அமிதாப்பச்சனின் எண்பதாவது பிறந்த நாள். இதனை கொண்டாடும் வகையில் 'புராஜெக்ட் கே' படக் குழுவினர் அமிதாப்பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரத்தின் வலிமையை உணர்த்தும் வகை...