Author: Kodanki
தீபாவளி ஸ்பெஷல்.. ரசிகர்களை உற்சாகப்படுத்திய வாரிசு படக்குழு !
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம் 'வாரிசு'. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'வாரிசு' படத்தின் முதல் பாடல் தீபாவளி அன்று வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும், இசையமைப்பாளர் தமன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தீபாவளி என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், உற்சாகமடைந்த ரசிகர்கள் தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட் என்று கமெண்ட் செய்து பதிவை வைரலாக்கி வருகின்றனர். 'வாரிசு' திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது....
அமோக வசூல் குவிக்கும் “3” படத்தின் தெலுங்கு பதிப்பு !
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமான படம் '3'. இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
2012-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மூலம் தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம்பெற்ற, 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் 10 வருடங்களுக்கு பிறகு தற்போது '3' படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மறு வெளியீடு செய்துள்ளனர். அங்கு இந்த படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் ஒரு பாடலை திரையரங்கில் இருக்கும் அனைவரும் பாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும் திரையரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி தெலுங்கு திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது நடித்...
எந்த பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் – அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பேச்சு!
உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி நுழைவாயிலில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தலைமை தாங்கினார். மாணவ செயலர் பூபதிராஜா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் கூறுகையில் , செப்டம்பர் 10 ந் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக ஐ.நா சபை அறிவித்தது, இந்தாண்டின் மையக்கருத்தாக "செயல்பாடுகள் மூலம் நம்பிக்கையை உருவாக்குதல்" உள்ளது.
தற்போது எந்த பிரச்சனையாக இருந்தாலும் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் பேசினாலும், அறிவுரைகள் சொன்னாலும், காதல் தோல்வி, தேர்வில...
அமலாவின் “கணம்” சினிமா என்ன சொல்லுது?! விமர்சனம்
கடந்த காலத்தில் அறியாமையால் செய்த தவறுகள், அலட்சியத்தால் தவறவிட்ட சந்தர்ப்பங்கள் அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் இழப்புகள், இது அனைவருக்குமே நடந்திருக்கும். மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் சரி செய்து விடலாம் என்று அதை நினைத்து வருந்துவோம்.
ஒரு வேளை உண்மையாகவே அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆம். இது தான் ஷரவானந்த், சதிஷ் மற்றும் ரமேஷ் திலக் யோசிக்கிறார்கள்.
அவர்கள் மூவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்கள். அந்த பருவத்தில் அவர்கள் நழுவவிட்ட வாய்ப்புகளையும், காலத்தை வீணடித்து விட்டு இளம் வயதில் வருந்தி கொண்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் விஞ்ஞானியான நாசர் டைம் மிஷின் குடுக்கிறார். அதன் துணை கொண்டு கடந்த காலத்திற்கு சென்று எல்லாவற்றையும் சரி செய்து வாருங்கள் என்கிறார்.
அம்மாவிற்காக ஷரவானந்தும், காதலிக்காக சதிஷும், படிப்பிற்காக ரமேஷ் திலக்கும் கடந்...
ஈரோட்டில் போலிமதுபான தொழிற்சாலை கண்டுபிடிப்பு!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த மது பாட்டில்கள் போலியானது என்றும் ஈரோடு மாவட்டம் சூளை பகுதியில் இருந்து கொண்டு வருவதாகவும் காரில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கும்பகோணம் போலீசார் ஈரோடு போலீசாருடன் இணைந்து ஈரோடு சூளை பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது அங்கு போலியாக ஒரு மது தொழிற்சாலை இயங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு இருந்த 4பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டிசென்று மடக்கி பிடித்தனர்.
மேலும் போலீசார் மதுபான தொழிற்சாலையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போலி மது பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருட்களான எரிசாராயம், பல்வேறு கலர் பொடிகள், மூடிகள், போலி ஹாலோகிராம் ஸ...
தக்காளி விலை குறைந்தது: கிலோ ரூ.40-க்கு விற்பனை!
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினசரி தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த மாதம் இறுதிவரை மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து குறைய தொடங்கியதால் விலை திடீரென அதிகரித்தது.
கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கும் வெளிமார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரையிலும் விற்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக தக்காளி வரத்து அதிகரித்து உள்ளதால் விலை சற்று குறைந்துள்ளது.
இன்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-க்கும் சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.50-க...
சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விஷாலுக்கு அவகாசம்.. உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.
இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனம் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று விஷாலுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.
கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட விஷாலுக்கு தடை விதிக்க கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 15 கோடி ரூபாயை உயர்நீதிமன்றம் தலைமைப் பதிவாளர் பெயரில் 3 வாரங்களில் வங்கியொன்றில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்ய வேண்டும் என விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நேரில் ஆஜரான விஷால், இந்த உத...
அதர்வா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடித்துள்ள திரைப்படம் 'டிரிக்கர்'. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் அருண் பாண்டியன், சீதா, முனீஸ்காந்த், சின்னி ஜெயந்த், அறந்தாங்கி நிஷா, அன்புதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள 'டிரிக்கர்' படத்திற்கு இயக்குனர் பிஎஸ் மித்ரன் வசனம் எழுதியுள்ளார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'டிரிக்கர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'டிரிக்கர்' திரைப்படம் செப்டம்பர் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
https://twitter.com/Atharvaamurali/status/1567830339208486913?ref_src=twsrc%5Et...
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் புதிய படம்!
*பெண்களுக்காக விழிப்புணர்வை ஏற்படுத்த வரும் புதிய ப(பா)டம்*
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் எக்கசக்கமான திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இருந்த போதிலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு மட்டும் தான் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
அந்த வகையில் தற்போது சமூகத்திற்கும் பெண்களுக்கும் தேவையான கதைகளத்துடன் புதிய திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது. ஏமாற்றுக்காரர்கள்,
பிளாக் மெயில் செய்பவர்களிடம் இருந்து பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகிறது.
ஈஷான் என்ற அறிமுக நடிகர் ஹீரோவாகவும் பிரனாலி என்ற அறிமுக நடிகை நாயகியாகவும் நடிக்கும் இந்த படத்திற்கு மாரிச்செல்வன் கதை எழுத ஈஷான் நடிப்பது மட்டுமில்லாமல் த...

