தோல்விக்குப் பின் மீள்வது எப்படி “கணம்” பாருங்கள் புரியும் என்கிறார் அமலா!
திரையுலகில் பெரும்பாலான கதாநாயகிகள் திருமணம் ஆனபிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு குடும்பம், குழந்தைகள் என வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் தொண்ணூறு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை அமலா.
இவரும் திருமணத்திற்கு பிறகு நடிப்பதை தவிர்த்து குடும்பத்தினரோடு நாட்களை கழித்து வந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட குடும்பப்பாங்கான “கணம்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
“கணம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அந்த விழாவில் நடிகை அமலா பேசுகையில்… நான் ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும்போதெல்லாம் எனக்கு கிடைக்கும் அன்பு, வரவேற்பு திரையுலக ரசிகர்களின் கண்களில் தெரியும் ஆர்வம் என எல்லாவற்றையும் பார்க்கும் போது சொந்த வீட்டிற்குத் திரும்பியதைப் போல் உணர்கிறேன்.
நான் தமிழ் சினிம...









