புதன்கிழமை, ஜூலை 8
Shadow

Author: Kodanki

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் பலி- 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்!

துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் இதுவரை 4000 பேர் பலி- 20 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
துருக்கி- சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 7.8 ரிக்டர் அளவிலும், இரண்டாவதாக 7.5 ரிக்டர் அளவிலும், மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தில் 4000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை தொடர்ந்து துருக்கி அரசு 7 நாட்கள் தேசிய துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா, உக்ரைன் உள்ளிட்ட நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்க வாய்ப்புள்ளதா...
வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

வடக்குப்பட்டி ராமசாமியில் இணைந்த மேகா ஆகாஷ்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
நடிகர் சந்தானம் தற்போது 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கும் 'வடக்குப்பட்டி ராமசாமி' படத்தில் நடிக்கவுள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். மேலும், இந்த படத்தில் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் பேட்ட, பூமராங், எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை உள்ளிட்ட பல படங்களில் நடித்த மேகா ஆகாஷ் இணைந்துள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது....
வாணி ஜெயராம் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவல்!

வாணி ஜெயராம் பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கை தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு ஆண்டு வெளியான 'தீர்க்க சுமங்கலி' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். 'வீட்டுக்குவந்த மருமகள்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்' முதலான படங்களில் பாடியிருந்தாலும் 'தீர்க்கசுமங்கலி' படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது. தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை இவர் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் பெற்றுள்ள வாணி ஜெயராமுக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. வாணி ஜெயராம் நேற்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து நிலை தடுமாறி கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்த...
திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!

திரைப்பட இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. இயக்குநராக மட்டுமின்றி 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்தவர் டி.பி.கஜேந்திரன். வீடு மனைவி மக்கள், பாண்டி நாட்டு தங்கம், சீனா தானா, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். நேற்று பழம்பெரும் பாடகி வாணிஜெயராம் உயிரிழந்த நிலையில் இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்....
லியோ – தளபதி 67 படம் நான்கு மொழிகளில் மட்டும் வெளியாகிறது!

லியோ – தளபதி 67 படம் நான்கு மொழிகளில் மட்டும் வெளியாகிறது!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து இப்படத்தின் டைட்டில் புரோமோ நேற்று மாலை வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், நடிகர் விஜய் மலையாள ரசிகர்களை தவிர்த்தாரா..? என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. அதாவது, 'லியோ' திரைப்படத்தின் டைட்டில் போ...
குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- மணிமுத்தாறில் குளிக்க தடை!

குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு- மணிமுத்தாறில் குளிக்க தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நேற்று இரவு முதல் இடைவிடாத சாரல் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சில தினங்களாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்ட நிலை காணப்பட்டது. தற்போது இந்த மழையால் ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கும் நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. மாஞ்சோலை பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்வதால் மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதன் காரணமாக பொதுமக்கள் குளிக்க வனத்துறை ...
வைரலாகும் பத்து தல பட பாடல்!

வைரலாகும் பத்து தல பட பாடல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
https://youtu.be/erGBtpMPi4Q சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் 'பத்து தல' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, 'பத்து தல' படத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'நம்ம சத்தம்' என்ற பாடல் பிப்ரவரி 3-ந்தேதி (இன்று) நள்ளிர...
பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்!

பரியேறும் பெருமாள் பட புகழ் நெல்லை தங்கராஜ் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
2018-ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நெல்லை தங்கராஜ். தெருக்கூத்து கலைஞரான நெல்லை தங்கராஜ் இப்படத்தில் பரியனின் (கதிர்) தந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் பிரபலம் அடைந்திருந்திருந்தாலும் வசிப்பதற்கு வீடு இல்லாமல் குடுசை வீட்டில் வாழ்ந்து வந்த தங்கராஜுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அவருக்கு வீடுகட்டி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தெருக்கூத்துக் கலைஞரும் நடிகருமான நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர், கலைஞர்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
நான் 90 சதவிகிதம் குணம் அடைந்து விட்டேன்- விஜய் ஆண்டனி !

நான் 90 சதவிகிதம் குணம் அடைந்து விட்டேன்- விஜய் ஆண்டனி !

Uncategorized
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்ற போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தான் 90 சதவிகிதம் குணமடைந்துவிட்டதாக விஜய் ஆண்டனி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "அன்பு இதயங்களே நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் ...
சமந்தா ரூத் பிரபு,  வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ  இந்திய ஒரிஜினல்  சிட்டாடலில் நடிக்கிறார்!

சமந்தா ரூத் பிரபு, வருண் தவானுடன் இணைந்து பிரைம் வீடியோ இந்திய ஒரிஜினல் சிட்டாடலில் நடிக்கிறார்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
திரைப்படத் தயாரிப்பில் தனித்துவம் வாய்ந்த இரட்டையர்களான ராஜ் & டிகே உருவாக்கத்தில், தயாராகிவரும் இந்த ஒரிஜினல் தொடர் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்படும் வரம்புகள் இல்லாத வகையில் புத்தம் புதிய, மற்றும் தனித்துவமான திரைப்படங்கள், டிவி ஒளிபரப்புக்கள், ஸ்டாண்ட் அப் நகைச்சுவை, அமேசான் ஒரிஜினல்கள் , விளம்பரங்கள் இல்லாத அமேசான் பிரைம் மியூசிக் இசை, இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்பு வரிசை தேர்வுகளை விரைவாகவும் இலவசமாகவும் வழங்கல், மதிப்பு மிக்க சலுகைகளை எளிதாக அணுகும் வசதி, பிரைம் ரீட்டிங்கில் எல்லையற்ற வாசிப்பு, பிரைம் கேமிங்கின் மொபைல் கேமிங் உள்ளடக்கங்கள், ஆகியவைகளோடு பணத்துக்கான ஒரு பிரமிக்கத்தக்க மதிப்பை அமேசான் பிரைம் வழங்குகிறது. இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 1499 மட்டுமே உறுப்பினர் சந்தா செலுத்துவ...