மவுன போராட்டம் நடத்திய சிம்புவை கட்டித் தழுவி பாராட்டிய சீமான்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மவுன போரட்டம் நடத்திய நடிகர் சிம்புவை நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்தித்து பாராட்டினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு தனது வீட்டு வாசலில் 10 நிமிடம் மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து அவரது குடும்பத்தாரும் மவுனமாக நின்றிருந்தார்கள்.
இந்த போராட்டத்தில் இயக்குனர் ராமும் கலந்து கொண்டார். சிம்புவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் தங்களின் வீடுகள், அலுவலகங்கள் முன்பு மவுன போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சிம்புவை சந்தித்து பாராட்டினார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு நடத்தினோம். தடையை மீறி நடத்தியதால் எங்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். வேறு இடங்களிலும் ஜல்லிக்கட்டு நடத்துவோம். படத்தை ரிலீ...
