இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’
இரட்டை முகத்தில் மர்ம மிரட்டல் – ஜே.டி. சக்கரவர்த்தியின் ‘சூனியம்’ கவனம் கவரும் திகில் முயற்சி!
சூனியம், கருமம், மர்ம நம்பிக்கைகள் போன்ற அடிப்படையில் உருவாகும் திகில்–மர்ம திரைப்படமாக ‘சூனியம்’ உருவாகி வருகிறது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன் உருவாகும் இந்த படம், ஆரம்ப கட்டத்திலேயே ரசிகர்களின் ஆர்வத்தை கிளப்பியுள்ளது.
பல பரிமாணங்களில் தன்னை நிரூபித்துள்ள நடிகர் ஜே.டி. சக்கரவர்த்தி, இந்த படத்தில் இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் தோன்றுகிறார். ஹீரோவும் வில்லனுமாக இரட்டை கதாபாத்திரத்தில் அவர் நடிப்பது இந்த படத்தின் முக்கிய பலமாகும். இந்த ‘டுவல் ரோல்’ அணுகுமுறை, கதைக்கு கூடுதல் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது.
M3 மீடியா மற்றும் மஹா மூவீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சூர்யாஸ் இயக்குகிறார். மகர்ஷி கொண்ட்லா வழங்கும் இப்படத்திற்கு மகேந்திர நாத் கொண்ட்லா தய...







