ரஷிய அதிபர் புதின் மெழுகு சிலை அகற்றம்!
பிரான்ல் நாட்டில் பாரிஸ் நகரில் கிர்வின் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் உலக அளவில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள்,
விளையாட்டு வீரர்கள் மற்றும் சாதனையாளர்களின் உருவத்தினை மெழுகு சிலையாக வடிவமைத்து காட்சிப்படுகின்றனர்.
இந்த நிலையில் , கிர்வின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் மெழுகு சிலை தற்போது அகற்றப்பட்டுள்ளது.
இது குறித்து கிர்வின் அருங்காட்சியகத்தின் இயக்குநர் யெவஸ் டெல்ஹோமியோவ் பேசுகையில், தற்போது நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் ரஷிய இடையேயான போர் காரணமாக, ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின் மொழுகு சிலை அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிர்வின் அருங்காட்சியக வரலாற்றின் முதன் முறையாக , தலைவர் ஒருவரின் சிலை அகற்றப்பட்டுள்ளதாகவும், கடந்த சில நாள்களுக்கு முன்னர் சிலையை சிலர் சேதப்படுத்த முயற்சி செய்ததாகவும் ...


