ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26
Shadow

politics

தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

தூத்துக்குடியில் மேலும் ஒரு இடத்தில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி அ.குமரெட்டியாபுரம் கிராமத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பொதுமக்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியது. இதையொட்டி ஏற்கனவே பொதுமக்கள் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்ட குழுவினருடன் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு தரப்பினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக கூறினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் மற்றும் போராட்ட குழுவினர் திட்டமிட்டப்படி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என அறிவித்தார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள போலீஸ் நட...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் – ராகுல் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் – ராகுல் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனமும், வேதனையும் வெளியிட்டுள்ளார். ’ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 9 பேரை போலீசார் சுட...
டெல்லியில் ராகுல், சோனியாவை சந்தித்தார் குமாரசாமி – மந்திரிசபை குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் ராகுல், சோனியாவை சந்தித்தார் குமாரசாமி – மந்திரிசபை குறித்து தீவிர ஆலோசனை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்க உள்ளார். மந்திரிசபையில் காங்கிரஸ் கட்சிக்கும் இடம் அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மந்திரிசபை தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து குமாரசாமி விவாதித்தார். அப்போது, எந்தெந்த துறைகளை காங்கிரசுக்கு ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 40 நிமிட சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த குமாரசாமி, “கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உடன் மந்திரி சபை தொடர்பாக விவாதிக்க ராகுல் அனுமதி அளித்துள்ளார். உள்ளூர் தலைவர்களுடன் ராகுல் நாளை ஆலோசனை நடத்தி முடிவுகளை இறுதி செய்வார்” என தெரிவித்தார். நாளை நடக்க உள்ள பதவியேற்பு விழாவுக்கு இருவரும் வருவதாக உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்....
காவிரி பிரச்சனை- கமல்ஹாசனின் ஆலோசனை கூட்டம்

காவிரி பிரச்சனை- கமல்ஹாசனின் ஆலோசனை கூட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் காவிரி நீர்பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார். அதன்படி ஒவ்வொரு கட்சி தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ஆலோசனை கூட்டத்துக்கு பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார். இக்கூட்டம் கட்சிகளையும், இயக்கங்களையும் கடந்து காவிரி நீர் குறித்த நேர்மையான அக்கறையும், உண்மையான உணர்வும், தெளிவான திட்டங்களும் கொண்டுள்ள விவசாயிகள், வல்லுனர்கள், சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கான ஒரு செயல் திட்டத்தை வடிவமைத்திடும் நோக்கத்தில் கூட்டப்படுகிறது என்றுதெரிவித்தார். “நிரந்தர தீர்வுக்கான தமிழக விவசாயிகளின் குரல்” என்று பெயரிடப்பட்ட இந்த ஆலோசனை கூட்டம் இன்று காலை தி.நகரில் உள்ள ஓட்டலில் நடந்தது. இதில் கமல்ஹாசன், பா.ம.கா. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வி...
78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

78 வயது ரசிகையை கவுரவித்த ரஜினி

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது படங்களில் பிசியாக இருந்தாலும், அரசியல் பணியிலும் தீவிரம் காண்பித்து வருகிறார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசித்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற காவலர்களுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதற்கு இன்னுமொரு உதாரணம் நடந்திருக்கிறது. திருவொற்றியூரைச் சேர்ந்தவர் திருமதி சாந்தா. இவருக்கு வயது 78. தீவிர ரஜினி ரசிகையான சாந்தா, ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார். ரஜினி மக்கள் மன்ற கிளை உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வரும் சாந்தாவின் ஒரே விருப்பம், ரஜினியைச் சந்தித்து தனது பணிகளைச் சொல்ல வேண்டும் என்பதுதான். இது குறித்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் இன்று ரஜினியிடம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சாந்தாவை தன் இல்லத்துக்கு இன்று வரவழைத்த ரஜினிகாந்த், அவருக்கு பொன்னாடை அண...
அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி

அரசியல் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி

CINI NEWS, HOME SLIDER, politics, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் நுழையப்போவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆர்.ஜே.பாலாஜியும் சமீபத்தில் அவரது டுவிட்டர் படத்தை, கட்சிக் கொடி போல் மாற்றினார். ஆர்.ஜே.பாலாஜி ஏன் இப்படி செய்கிறார்? உண்மையிலேயே அரசியலில் நுழையவிருக்கிறாரா, அல்லது வேறு ஏதாவது காரணமாக இருக்குமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தனது அடுத்த பயணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று ஆர்.ஜே.பாலாஜி நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக `எல்கேஜி' என்றபடத்தில் நடிக்கிறார். பிரபு இயக்கும் இந்த படத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியல்வாதியாக அவதாரம் எடுத்திருக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் உரிமையாளர் டாக்டர்.ஐசரி கணேஷ் தயாரிக...
மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

மக்களை பிரித்து மோதலை தூண்டுகிறது பாஜக – ராகுல் குற்றச்சாட்டு

HOME SLIDER, NEWS, politics, Uncategorized, செய்திகள்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக சத்தீஸ்கர் மாநிலம் சென்றுள்ளார். இன்று பிலாஸ்பூர் பகுதியில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுடன் கலந்துரையாடிய அவர், தொண்டர்களின் கேள்விகளுக்கு விடையளித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் எந்த பிரச்சனை குறித்தும் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பினார். ‘எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இருக்கிறதோ அங்கெல்லாம் தலித்துகள், சிறுபான்மையினர், பெண்கள், இளைஞர்கள் தாக்கப்படுகிறார்கள். மக்களை பிரித்து அவர்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்ளும்படி பாஜக செய்கிறது. ‘உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ ஒரு பெண்ணை கற்பழித்தார். ஆனால் அதுகுறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை, பிரதமர் வழிகாட்டியாக இருக்க வேண்டும் இல்லையெனில் நாடு திக்கற்று போகும்’ என ராகுல் காந்தி தெரிவித்தார். மேல...
அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது – பிரகாஷ்ராஜ் வருத்தம்

அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது – பிரகாஷ்ராஜ் வருத்தம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடகத்தில் பாரதிய ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்ததுடன் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார்.   இந்த நிலையில் முதல்-மந்திரியாக எடியூரப்பா பதவி ஏற்றது பற்றி தனது டுவிட்டரில் பிரகாஷ்ராஜ் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கி விட்டது. பாரதிய ஜனதா மோசமான அரசியல் செய்ய தொடங்கிவிட்டது. இனி எந்த மக்கள் பிரச்சினையில் சிக்குகிறார்கள் என்ற எந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்.எல்.ஏக்கள் எங்கே செல்கிறார்கள். எந்த சொகுசு விடுதியில் எந்த எம்.எல்.ஏ. இருக்கிறார் என்ற புகைப்படம் அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக தலைப்பு செய்திகள் வரப்போகிறது. சந்தோ‌ஷமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இவ்வாறு வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்....
காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு- வரைவு செயல் திட்டத்தில் தகவல்

காவிரி நீரை பகிர்ந்து கொடுக்க 10 பேர் கொண்ட குழு- வரைவு செயல் திட்டத்தில் தகவல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்துள்ளது. அமைச்சரவை ஒப்புதலுக்குப் பிறகு அரசிதழில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக அந்த அறிக்கையின் நகல்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களை கேட்டறியும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை 16-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. மத்திய அரசு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்துள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த குழுவில் இடம்பெறுவார். காவிரி தொடர்பான அமைப்பின் தலைவர், 5 ஆண்டுகள் பதவியில் நீடிக்க முடியும் எ...
எஸ்வி சேகர் தனது  பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை  -_சென்னை உயர்நீதிமன்றம்  கண்டனம்

எஸ்வி சேகர் தனது பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை -_சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பதிவுக்கு வருத்தம் மட்டுமே தெரிவித்தாரே தவிர அதை மறுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சென்னையில் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். அந்த சந்திப்பின்போது பெண் நிருபர் ஒருவரின் கேள்விக்கு அவரது கன்னத்தை தட்டினார் ஆளுநர். இதற்கு அந்த பெண் நிருபர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஆளுநர் மன்னிப்பும் கேட்டார். எனினும் மன்னிப்பை ஏற்றுக் கொண்ட பெண் நிருபர் கன்னத்தை கிள்ளயதற்கு ஆளுநர் சொன்ன காரணத்தை ஏற்கவில்லை என்றார் இந்நிலையில் எஸ்வி சேகர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் பெண் நிருபர்களின் தரத்தை தாழ்த்தும் அளவுக்கு அவர்களை கடுமையாக அவதூறாக விமர்சனம் செய்திருந்தார். இந்த கருத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. ...