மின்வாரிய ஊழியர்களின் முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வி..!
மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. மீண்டும் பிப்ரவரி 15-ம் தேதி மீண்டும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறியுள்ளனர்.
மின்வாரிய ஊழியர்களுக்கு 1.1.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவுடன் தொழிற்சங்கங்கள் 4 கட்டமாக ஏற்கெனவே பேச்சு நடத்தின.
தமிழ்நாடு மின்சார வாரியம், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான முத்தரப்புப் பேச்சுவார்த்தை கடந்த ஜன.22-ஆம் தேதி, தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மின்வாரிய அதிகாரிகள், தொழிலாளர் நலத் துறை ஆணையர் பங்கேற்புடன் நடைபெற்றது.
இவற்றை நிர்வாகம் ஏற்க மறுத்ததால் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பெருந்திரள் தர்ணா, காத்திருப்ப...









