ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 18
Shadow

politics

அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்…!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஜனவரி 7ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசு பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் 2018-ஜனவரி 7- ம் தேதி தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும் என தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்...
திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

திராவிட கட்சிகளை எதிர்த்து அரசியல் செய்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினி, தன் ரசிகர்களை 4 வது நாளாகச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவருகிறார். இன்று கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை ரஜினி சந்தித்து வருகிறார். காலை சுமார் 8.30 மணிக்கு ராகவேந்திரா மண்டபம் வந்த ரஜினி, ரசிகர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:- என் நண்பர்கள் அதிகம் வாழும் நகரம் கோவை என்று பேச்சைத் தொடங்கிய ரஜினி, அங்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். எனது குரு சச்சிதானந்தர் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர். எனக்கு மந்திர உபதேசம் செய்தவர் சச்சிதானந்த சுவாமிகள். சுவாமி தயானந்த சரஸ்வதி எனது குரு. சச்சிதானந்த சுவாமிகள் சொல்லியே பாபா படம் எடுத்தேன். அதேபோல் தயானந்த சரஸ்வதி எனக்கு குரு. கோயம்புத்தூர் விமான நிலையம் போகும் போதெல்லாம் எனக்கு ஒரு ஞாபகம் வரும். ஆன்மிகத்திற்கும் ஓரளவுக்கு பப்ளிசிட்டி தேவை. கோவை வ...
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது: முதல்வர் பழனிசாமி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், எம்.எல்.ஏ.வாக இன்று பதவியேற்றுக்கொண்டார். சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தினகரன், “குறிப்பிட்ட சிலர் மீது நடவடிக்கை எடுத்தால் ஆட்சியை தக்க வைக்கலாம்” என்று கூறினார். “கட்சிக்கு களங்கம் விளைவித்தவர்களே, மற்றவர்களை களங்கம் விளைவித்ததாக நடவடிக்கை எடுக்கின்றனர். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தில் எங்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும். இவர்களின் ஆட்சி இன்னும் 3 மாதத்திற்கு மட்டுமே தொடரும்” என்றும் கூறினார். இந்நிலையில், கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அ.தி.மு.க ஆட்சி மீது திட்டமிட்டு வீண்பழியை சுமத்தி அரசியல் ஆதாயம் தேட சிலர் முயற்சி செய்கின்றனர். ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அ.தி.மு.க என...
எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்..!

எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார் டிடிவி தினகரன்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் ஆக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் சென்னை கோட்டையில் சபாநாயகர அறையில் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். பதவி பிரமாணம் செய்து வைத்த சபாநாயகர் தனபாலுக்கு ரோஜா பூக்கூடை கொடுத்து தினகரன் மகிழ்ச்சி தெரிவித்தார்.  
அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

அரசியல் காலம்தான் முடிவு செய்யும்… 31ம் தேதிக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது – ரசிகர்களை உற்சாகப்படுத்திய ரஜினி

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கடந்த 26ந்தேதியில் இருந்து சந்தித்து வருகிறார்.  அவர்களுடன் புகைப்படமும் எடுத்து வருகிறார்.  இந்த நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று 4வது நாளாக ரசிகர்களை சந்திக்கிறார்.  கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர் மாவட்ட ரசிகர்களுடன் இந்த சந்திப்பு நடக்கிறது. அவர் ரசிகர்கள் மத்தியில் பேசும்பொழுது, 31ந்தேதிக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன என கூறினார்.  இதனை தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து ஆரவாரம் எழுந்தது.  தொடர்ந்து அவர், என் நண்பர்கள் அதிகம் வாழும் ஊர் கோவை.  என் குருநாதர் சச்சிதானந்த் கோவை மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர். பெயர், புகழால் மரியாதை கிடைக்கும்.  ஆனால் நாம் எப்படி வாழ்கிறோம் என்பதை வைத்தே மக்கள் நம்மை மதித்திடுவார்கள். காலம்தான் மிக முக்கியம்.  காலம் வரும்பொழுது அனைத்தும் தன்னாலே மாறும்.  சினிம...
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது!

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 8-ம் தேதி கூடுகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றில் தமிழக சட்டப்பேரவை வரும் ஜனவரி 8-ம் தேதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்ற பின், முதல் முறையாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்ற உள்ளார். பேரவை எத்தனை நாள்கள் நடக்கும் என்பதுகுறித்து, அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும் என்று தெரிகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், முதல்முறையாக சட்டப்பேரவை கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். மேலும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் யாரும் சட்டப்பேரவைக்கு வர முடியாத சூழலே நிலவுகிறது...
சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்

சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும் – விஷால்

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `இரும்புத்திரை'. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் விஷால், சமந்தா, இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன், இயக்குநர் திரு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் விஷால் பேசும் போது, `இரும்புத்திரை' முதலில் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தோம். ஆனால், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை கட்டாயம். அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது. ஆர்.கே.நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பலர் வேண்டிக் கொண்டனர். அதில் இயக்குநர் மித்ரனும் ஓருவர். ஏனெனில் மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற மித்...
‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!

‘புரட்சி தலைவி’ திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
திரை உலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் ஜெயலலிதா. பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக உயர்ந்தார். திரை உலகிலும், அரசியலிலும் தனி அடையாளமாக இருந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் தயாராக இருக்கும் இந்த படத்துக்கு ‘புரட்சி தலைவி’ என்று பெயரிட்டுள்ளனர். மும்பையை சேர்ந்த பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதற்காக ஒரு வருடத்துக்கு மேலாக ஜெயலலிதா பற்றிய தகவல்களை சேகரித்து இருக்கிறார்கள். இதுகுறித்து, இந்த படத்தை தயாரிக்க இருக்கும் ஆதித்யா பரத்வாஜ் கூறியதாவது:- ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே அவரிடம் இதுபற்றி தெரிவித்தோம். ஆனால் அவர் இதுகுறித்து பிறகு பேசலாம் என்று சொன்னார். ‘புரட்சி தலைவி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸ்டுடியோக்களில் நடைபெறும். ஆரம்பகால திரைப்பட வாழ்க்கை பற்றிய படப்பிடிப்பு சென்னையில் படமாகு...
`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!

`மாரி-2′ படத்தில் சாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கும் வரலட்சுமி..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
  வெற்றிமாறன் இயக்கத்தில் `வடசென்னை’, கவுதம் மேனன் இயக்கத்தில் `எனை நோக்கி பாயும் தோட்டா’ என ஒரே நேரத்தில் இரு படங்களில் நடித்து வருகிறார் தனுஷ். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி-2′ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி ஒப்பந்தமாகி இருந்த நிலையில், நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமசும், முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் நடிக்கின்றனர். தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு அவரது நண்பர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்க...
கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு…புத்தாண்டு கொண்டாடிய பின் டில்லி திரும்புவார்

கோவா நட்சத்திர விடுதியில் சோனியா காந்தி ஓய்வு…புத்தாண்டு கொண்டாடிய பின் டில்லி திரும்புவார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சென்ற ஆண்டு சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவா சென்றிருந்தார். அப்போது மர்ம கோவா பகுதியில் மக்களிடையே பேசும் போது, மாசற்ற கோவாவை தன் தாயார் சோனியா காந்தி மிகவும் விரும்புவதாக கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக 19 ஆண்டுகளாக பதவி வகித்த சோனியா காந்தி கடந்த 16-ம் தேதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், சோனியா கோவாவில் உள்ள நட்சத்திர விடுதியில் ஓய்வு எடுத்து வருகிறார். தனது நெருங்கிய நண்பர்களுடன் கடந்த 26-ம் தேதி கோவா சென்ற இவர் புத்தாண்டு கொண்டாடிய பிறகு வீடு திரும்புவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியா காந்தி தனது மகன் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு கோவாவில் ஓய்வு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது....