வெள்ளிக்கிழமை, ஜூலை 24
Shadow

politics

செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்

செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதாடினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:- வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன்:- சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது. வக்கீல் பி.எஸ்.ராமன்:- சபாநாயகரின் நோட்டீசுக்கு பதில் அளிக்க ...
TTVதினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

TTVதினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
தினகரனின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சசிகலாவின் உறவினரான தினகரன். ஜனவரி 8 தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில், அவர் சுயேச்சை உறுப்பினராகப் பங்கேற்றார். இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமமூர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து தினகரன் வெற்றி பெற்றார் என்றும், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு நிறைய குக்கர்கள் விநியோகிக்கப்பட்டது என்றும், தேர்தல் ஆணையமே 30 லட்ச ரூபாயைக் கைப்பற்றியதாக அறிவித்தது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது இதனால் தினகரன் சட்டசபைக்குள் நுழையக்கூடாது என்றும், அவர் எம்எல்ஏவாக பணியாற்றத் தடை ...
வெள்ளித்திரையில் இந்திரா காந்தி ஆக மாறப்போகும் வித்யா பாலன்..!

வெள்ளித்திரையில் இந்திரா காந்தி ஆக மாறப்போகும் வித்யா பாலன்..!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகைகள்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் வித்யா பாலன் மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான சம்பவம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்தியாவின் முதல் மற்றும் கடைசி பெண்மணியான இந்திரா காந்தி 31-10-1984 அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தியாவின் ‘இரும்பு பெண்மணி’ என்றழைக்கப்பட்ட இந்திரா காந்தியின் வாழ்க்கையில் நிகழந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான சகாரிகா கோஷ், ‘இந்திரா: இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த பிரதமர்’ என்ற நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். பிரபல கவர்ச்சி நடிகை மறைந்த சில்க் ஸ்மிதா வேடத்தில் ’டர்ட்டி பிக்சர்’ படத்...
செல்லாது… செல்லாது… வருத்தம் மட்டுமல்ல பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் வைரமுத்துவை சாடும் தமிழிசை..!

செல்லாது… செல்லாது… வருத்தம் மட்டுமல்ல பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் வைரமுத்துவை சாடும் தமிழிசை..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கவிஞர் வைரமுத்து, ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும், எழுதவும், ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதாயாக, பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை, தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது? தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது, பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது. உடனே கட்டுரையை மாற்றி, எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி, இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப் போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ...
தேர்தலில் சீட் தருவதற்கு லஞ்சமாக நடிகையை  நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..!

தேர்தலில் சீட் தருவதற்கு லஞ்சமாக நடிகையை நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  தேர்தலில் சீட் தருவதற்கு நிர்வாணமாக நிற்கச் சொன்ன ராஜபக்‌ஷே நண்பர்..! நடிகை வெளியிட்ட பகீர் குற்றச்சாட்டு இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மகிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட நடிகை மதுசா ராமசிங்கே விரும்பியுள்ளார். இது தொடர்பாக மகிந்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பரிடம் நடிகை மதுசா உதவி கேட்டிருக்கிறார், ராஜபக்சேவின் நண்பரோ, நடிகை மதுசாவை படுக்கைக்கு வரும்படி அழைத்ததோடு முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என 'லஞ்சம்' கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை மதுசா இந்த விவகாரம் குறித்து கட்சியின் நிர்வாகியான முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவை சந்தித்து அவர் நண்பரின் நிர்வாணமாக நிற்க சொன்ன கொடுமையை சொல்லியிருக்கிறார். ஆனால், இதை கேட்ட மகிந்த ராஜபக்சேவோ அந்த குற்றச்சாட்டை கண்டுகொள்ளாமல் வெறும் சாரி மட்டும் கூறி விட்டு போய்...
தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம்: முதல் அமைச்சருக்கு மதுசூதனன் கடிதம்

தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம்: முதல் அமைச்சருக்கு மதுசூதனன் கடிதம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆர்.கே. நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம்: முதல் அமைச்சருக்கு மதுசூதனன் கடிதம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரான மதுசூதனன் தோல்வியுற்றார். இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தது பற்றி இதுவரை ஆலோசனை மேற்கொள்ளாதது ஏன்? என கேள்வி எழுப்பி அ.தி.மு.க. அவை தலைவர் மதுசூதனன் முதல் அமைச்சர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன் இடைத்தேர்தல் தோல்விக்கு முக்கிய அமைச்சர்களே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். மதுசூதனன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர். அவர் திடீரென போர்க்கொடி உயர்த்தியிருப்பதால் மீண்டும் கோஷ்டி சிக்கல் அதிமுகவில் உருவாகி...

சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
சிக்கிம் மாநில விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம் மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். விழா மேடையில் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு முதல்–மந்திரி விருப்பம் தெரிவித்தார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பவன்குமார் சாம்லிங், ‘‘எனது பணிவான பரிந்துரையை ஏற்று சிக்கிம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தனது பொன்னான நேரத்தை செலவிட ஒப்புக்கொண்ட ஏ.ஆர்.ரகுமானுக்கு நன்றி’’ என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், ‘‘எனக்கு முக்கியத்துவம் தந்து கவுரவம் அளிக்கும் விதமாக மாநிலத்தின் விளம்பர தூதராக அறிவித்ததற்கு நன்றி. சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, அமைதி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை கொண்டு...
விளக்கமளிக்க மறுப்பு பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு

விளக்கமளிக்க மறுப்பு பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விளக்கமளிக்க மறுப்பு பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதிலளித்து வந்தனர். 111 எம்.எல்.ஏக்களுடன் பெரும்பான்மை இல்லாமல் தமிழக அரசு உள்ளது என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களை தவிர்த்துவிட்டு பார்த்தால் பெரும்பான்மை குறித்த உண்மை விளங்கும். முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி நடந்து வருகிறது; மேலும் மூன்றரை ஆண்டு காலம் ஆட்சி நீடிக்கும் . என அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார். இந்தநிலையில், பேரவையிலிருந்து டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரும்பான்மை அரசு என அமைச்சர் தங்கமணி கூறிய கருத்துக்கு விளக்கமளிக்க மறுப்பு தெரிவித்ததால் வெளிநடப்பு செய்ததாக பேரவையிலிருந்து வெ...
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை முதல்வர்  தலையிட்டு தீர்க்க வேண்டும் – தினகரன் கன்னிப்பேச்சு

போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை முதல்வர் தலையிட்டு தீர்க்க வேண்டும் – தினகரன் கன்னிப்பேச்சு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஜெ., அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை முதல்வர் தலையிட்டு தீர்க்க வேண்டும். - தினகரன் கன்னிப்பேச்சு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக இன்று நடந்து வருகின்றது. ஒக்கி புயலில் அரசின் செயல்பாடுகள், உயர்கல்வித்துறையில் அரசின் சாதனைகள் என பல முக்கிய விவகாரங்கள் இன்று விவாதிக்கப்பட்டன. போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் ஸ்டிரைக் 6-வது நாளை எட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆர்.கே நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துள்ள டி.டி.வி தினகரன் இந்த பிரச்சனை குறித்து பேசினார். “ஜெயலலிதா அரசு என்பதை நிரூபிக்கும் வகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும். இவ்விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி தலையிட்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்கும் விதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்...
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள்
  திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில்a நேற்று ஒரு மனுதாக்கல் செய்தது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை அமைச்சரவை குழு உருவாக்கும் வரை இதனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த குழுவை அமைத்து வழ...