அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் – ஜோ பைடன் அறிவிப்பு!
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - ஜோ பைடன் அறிவிப்பு!
அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் அவர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அதிபர் ஜோ பைடன் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பென்சில்வேனியாவின் பிட்ஸ்பர்க்கில் பேசிய போது ஜோ பைடன் கூறியதாவது:
உள்கட்டமைப்பு வசதிகள், தட்பவெப்ப மாற்றம், கொரோனா தொற்று போன்றவற்றால் அமெரிக்காவின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அவற்றை மீண்டும் கட்டமைக்க வேண்டியது அவசியம். அதனால், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த இதுவரை இல்லா...









