இன்று ராஜ்யசபா தேர்தல்!
ராஜ்யசபா உறுப்பினர்களாக இருந்த நடிகை ரேகா, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்பட 58 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. கேரள மாநிலத்தில் 1 உறுப்பினர் இறந்ததால் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதனால் 59 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 23ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
மாநில வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்களின் எண்ணிக்கை விபரம் வருமாறு:
ஆந்திரம் - 3, பீகார் - 6, சத்திஷ்கர் - 1, குஜராத் - 4, அரியானா - 1, இமாசலப்பிரதேசம் - 1, கர்நாடகம் - 4, மத்தியப்பிரதேசம் - 5, மகாராஷ்டிரம் - 6, தெலங்கானா - 3, உத்தரபிரதேசம் - 10, உத்தரகாண்ட்- 1, மேற்குவங்கம்- 5, ஒடிசா - 3, ராஜஸ்தான் - 3, ஜார்கண்ட் - 2, கேரளம் - 1.
மொத்தம் தேர்தல் நடைபெற வேண்டிய 59 இடங்களில் 33 இடங்களுக்கு போட்டியின்றி உறுப்பினர் தேர்வு நடந்துள்ளது. ஆக, மீதமுள்ள 26 இடங்களுக்கு மட்டும்...









