NEWS
கார்ட்டூன் சர்ச்சையில் தேமுதிக சுதீஷ்!
*பதிலடி கார்ட்டூம் - சுதீஷ் விளக்கம்*
*"கடந்த, 2016ம் ஆண்டு தினமலர் தேர்தல் களத்தில் வெளியிட்ட கார்ட்டூனை தான் தற்போது முகநூலில் பதிவிட்டேன்.*
*அன்று அவர்கள் போட்ட கார்ட்டூனுக்கும், இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கார்ட்டூனுக்கும் (விஜயகாந்தை ஏலம் விடுவதை போல சித்தரித்து) உள்ள வேறுபாட்டை தமிழக மக்கள் அறியவே முகநூலில் பதிவிட்டேன்.*
*அது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டதால் உடனடியாக நீக்கிவிட்டேன்" எல்.கே.சுதீஷ்
...
பி.எம்.கேர்ஸ் நன்கொடை லிஸ்ட் வெளியிட ஏன் தயக்கம் – பிரதமர் மோடிக்கு ப.சி கேள்வி
பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு மார்ச் கடைசி வாரத்தில் அறிவித்து, நன்கொடைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து பல தனியார் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பிரபலங்கள் உள்ளிட்ட தனி நபர்கள் நன்கொடைகளை வாரி வழங்கினர்.
இதற்கு மத்தியில், ‘பி.எம்.கேர்ஸ்’ நிதியில் திரட்டப்பட்ட நன்கொடைகளை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எப்.) மாற்ற உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து, தள்ளுபடி செய்து கடந்த 18-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இரண்டும் வெவ்வேறு நிதி, தனித்தனி பொருள், நோக்கத்துடன் கூடியவை என்பதால், தேசிய பேரிடர் நிவாரண நிதியுடன் பி.எம்.கேர்ஸ் நிதியை மாற்ற முடியாது என தீர்ப்பில் கூறப்பட்டது.
தற்போது பி.எம்.கேர்ஸ் நிதிக்கு வந்த நன்கொடைகள் பற்றிய கணக்கு அறிக்கைய...
பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள்!
பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கினர்
* பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது
முடக்கப்பட்ட கணக்கை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!
பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு தடை!
கடந்த ஜூன் 15ந்தேதி லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின் இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து தேச பாதுகாப்பு நலன்களை கவனத்தில் கொண்டு மத்திய அரசு டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 116 சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
இந்நிலையில் பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு எதிரானது என்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது....
கைலாசாவில் இயற்கை விவசாயம் செய்ய நிலம் வேண்டும் – நித்திக்கு கடிதம்
கைலாசா என்கிற நாட்டை உருவாக்கி உள்ளதாகக் கூறி உள்ள நித்யானந்தா, விநாயகர் சதுர்த்தி அன்று தனது நாட்டிற்கான நாணயங்களை வெளியிட்டு அதிர்ச்சியூட்டினார்.
இதைத்தொடர்ந்து மதுரை ஓட்டல் அதிபர் எங்களது உணவகத்தின் கிளையை கைலாசாவில் தொடங்குவதற்கு அனுமதி வேண்டி நித்யானந்தாவிற்கு கோரிக்கை வைத்தார்.
அந்த கோரிக்கையை ஏற்ற நித்யானந்தா தனது நாடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போது நிச்சயம் அனுமதி தரப்படும் என்றும் மதுரை, திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும் உறுதி அளித்தார்.
இந்த விவகாரம் முடிவுக்கு வருவதற்குள் மதுரையை சேர்ந்த இயற்கை விவசாயி பாண்டித்துரை என்பவர் நித்யானந்தாவுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், பரம்பரைப் பரம்பரையாக விவசாயம் செய்துவரும் குடும்பத்தில், தான் பிறந்துள்ளதாகவும், பொறியியல் படித்துவிட்டு தற்போது இயற்கை விவசாயம் செய...
பொருளாளர் பதவிக்கு போட்டியில்லை – ராசா, கனிமொழி அறிவிப்பு
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்
திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும்.
மனுக்கள் மீதான பரிசீலனை செப்.4 ஆம் தேதி நடைபெறும்; வேட்புமனு திரும்பப்பெற செப்.5 ஆம் தேதி கடைசி நாள் - திமுக.
வரும் 9ந் தேதி சென்னையில் திமுக பொதுக்குழு கூடுகிறது
இந்த சூழலில் ராசாவும், கனிமொழியும் பொருளாளர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை என அறிவித்து விட்டனர்
...
சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!
சசிகலாவின் 300 கோடி சொத்துக்கள் முடக்கம்!
கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், வணிக வளாகம் என 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி ரூ.1,500 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,600 கோடி மதிப்பிலான சசிகலாவுக்கு சொந்தமான பினாமி சொத்துகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு தனியார் நிறுவனம், சசிகலாவின் பினாமி நிறுவனமாக செயல்பட்டு வருவதும், இந்த நிறுவனத்தின் மூலம் சசிகலா சென்னையில் உள்ள போயஸ் கார்டன் மற்றும் தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஆலந்தூர், ஸ்...
ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் – கலெக்டர் உத்தரவு
ஊட்டிக்கு போகனும்னா கண்டிப்பா இ பாஸ் இருக்கனும் - கலெக்டர் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இதில் பலர் சுற்றுலா நோக்கத்தோடு வந்து ரகசியமாக தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்ப...


