செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

வினாயகர் சதுர்த்தி விழா முதல்வர் வாழ்த்து!

வினாயகர் சதுர்த்தி விழா முதல்வர் வாழ்த்து!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். ‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள்....
சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை சென்னை, அயனாவரத்தில் பிரபல ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் தலைமையில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சங்கரை பிடிக்க போலீசார் சென்றதாகவும், அப்போது அவர்களை அவர் தாக்க ஆரம்பித்ததால் தற்காப்புக்காக எதிர்த் தாக்குதல் நடத்தியதில் சங்கர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
ஸ்டெர்லைட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  *ஸ்டெர்லைட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்* ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி இல்லை என வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து ஆகஸ்ட் 18 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் உடல் ஆரோக்கியத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்று கூறி மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆரம்பம் முதல் இந்நாள் வரை ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வந்துகொண்டிருக்கிறார். இந்த ஆலைக்கு எதிராக சுமார் கால் நூற்றாண்டாக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை வைகோ தலைமை தாங்கி நடத்தி உள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் பசுமைத் தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்...
நீதிமன்ற அவமதிப்பு மன்னிப்பு கேட்க முடியாது – பிரஷாந்த் பூஷன் உறுதி

நீதிமன்ற அவமதிப்பு மன்னிப்பு கேட்க முடியாது – பிரஷாந்த் பூஷன் உறுதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சமீபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ பாப்டே இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது டுவிட்டர் பக்கத்தில், நீதிபதி ஹெல்மெட் அணியாதது குறித்தும், முக கவசம் அணியாதது குறித்தும் கேள்வி எழுப்பி இருந்தார்.   இதனையடுத்து, பிரசாந்த் பூஷண் மீது தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என உச்சநீதிமன்றம் கூறி அவருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது குறித்து தீர்ப்பு வெளியாகும் என கூறப்பட்டது. இந்தநிலையில், பிரசாந்த் பூஷணுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கினாலும், அது பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான விசாரணைக்குப் பிறகே தண்டனை நிறைவேற்றப்படும் என 2 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை குறித்த வா...
ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு பா.ஜ.க. அரசின் சதித் திட்டம் – வைகோ கண்டனம்

ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு பா.ஜ.க. அரசின் சதித் திட்டம் – வைகோ கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை: பா.ஜ.க. அரசின் சதித் திட்டம்! வைகோ கண்டனம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப் பணியாளர் தேர்வு முகமை (National Recruitment Agency - NRA) உருவாக்கப்படும் என்றும், மத்திய அரசு பணியிடங்களை நீரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்றும், இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். தற்போது வங்கிப் பணி, இரயில்வே பணி உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறை பணிகளுக்கு தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்வுகளை எழுதுவதால் கால விரயமும், தேர்வு கட்டண செலவு அதிகரிப்பதும், வீண் அலைச்சல...
விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டுக்குள்ளேயே கொண்டாட வேண்டும்: தமிழக அரசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும்: தமிழக அரசு பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு இன்று தெரிவித்துள்ளது. கொரோனாவை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், இன்று இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்து அமைப்புகள் அரசின் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்....
கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு தன்மையை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பே பள்ளிகள் திறப்பு பற்றி முடிவு செய...
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி இல்லை – கோர்ட் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை வலியுறுத்தி கடந்த 2018-ம் ஆண்டு மே 22-ந் தேதி பொதுமக்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக மாறியது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து அதே ஆண்டு மே மாதம் 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு ‘சீல்’ வைத்தது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசு எடுத்த முடிவு சரிதான் என்றும், ஆலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் பொதுமக்களுக்கு நோய்கள் வருகிறது. அதனால் அந்த ஆலையை திறக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடியை சேர்ந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்ப...
கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கேட்டதும் கிடைக்கும் இ-பாஸ்! முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும்முறை இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தால் உடனே இ-பாஸ் கிடைக்கிறது. திருமணம் போன்ற காரணத்திற்கு ஆதாரங்கள் எதுவும் இன்றி விண்ணப்பித்த நபர்களுக்கு இ-பாஸ் கிடைத்தது. விண்ணப்ப காரணங்களில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாத நிலையில் உடனே இ-பாஸ் தரப்படுகிறது. ஆதார் அல்லது ரேசன் அட்டை விவரங்களுடன் தொலைபேசி எண்ணையும் சேர்த்து விண்ணப்பித்தால் இ-பாஸ் உடனே கிடைக்கும். 2 நாள் அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது ஒருநாள் மட்டுமே இ-பாஸூக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து சென்னைக்கு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதே போல சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் எண...
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் – நடிகர் மோகன் உருக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி மீண்டு வர வேண்டும் - நடிகர் மோகன் உருக்கம்   திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது. அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன. தெலுங்கில் எனது முதல் படமான 'தூர்ப்பு வெல்லே ரயிலு' (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார் தான் இசையமைப்பாளர். முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத...