இங்கிலாந்தில் இருந்து கோவைக்கு வந்து தனிமைப் படுத்தப்பட்ட 133 பயணிகள்!
இங்கிலாந்து நாட்டில் இருந்து கோவைக்கு வந்த 133 தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தில் பரிணாம மாற்றம் கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவக்கூடியது. இதனைத்தொடர்ந்து இந்தியாவில் வரும் 31-ம் தேதி வரை இங்கிலாந்திற்கான விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு கடந்த நவம்பர் மாதம் முதல் வந்த பயணிகளின் விவரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களை கண்காணித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் கடந்த நவம...









