சாலமன் தீவில் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு!
சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான பீட்டர் ஷனேல் அகோவகா, இந்த வாரம் ஃபேஸ்புக்கின் தற்காலிக தடைக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதகா தெரிகிறது. மேலும் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இணைய சேவை வல்லுனர்களுடன் அமைச்சர் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதைப் பற்றி தகவல் தொடர்பு துறை அமைச்சர் பீட்டர் ஷனேல் அகோவகா தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்களுக்கு எதிராக தவறான மொழிகளை பயன்படுத்துவது, பிரதமருக்கு(மனஸ்சே சோகாவரே) எதிரான வாதங்கள், பாத்திர படுகொலை, விஐபி களைப்பற்றி அவதூறு, போன்ற பிரச்சனைகள் அனைத்தும் கவலைக்குரிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஆதலால் நாங்கள் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை கொண்டு வர இருக்கிறது என்னும் கேள்விக்கு, அரசாங்கமோ அமைச்சர் அ...









