சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

புதுக்கோட்டையில் சிறுவன் படுகாயம் எதிரொலியாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட கலெக்டர் தடை

புதுக்கோட்டையில் சிறுவன் படுகாயம் எதிரொலியாக துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட கலெக்டர் தடை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் அமைந்து உள்ளது.  இந்த மையத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு (சி.ஐ.எஸ்.எப்.) துப்பாக்கி சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், அந்த பகுதியில் தனது பாட்டி வீட்டுக்கு வந்த புகழேந்தி (வயது 11) என்ற சிறுவன் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்துள்ளான்.  இந்த நிலையில், இன்று துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது தவறுதலாக சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுவனை புதுகோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும், உயர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு சிறுவனுக்கு உயர் சிகிச்சை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட இளம்பெண்களை ஒரு கும்பல் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்தனர். இந்த கும்பலிடம் மாட்டிக்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் கதறும் வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி, பொள்ளாச்சி அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம், ஹேரேன்பால், பாபு என்ற பைக்பாபு ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வ...
தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள்
  தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையான விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிசம்பர் 29) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணமே விபிஎஃப் ஆகும். அத்துடன் எல்பிடி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்து, ஒரே மாதிரி வரி வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கௌரவ ஆலோசகர் டி. ராஜேந்தர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது டி.ராஜேந்தர் பேசுகையில், “அயல்நாடுகளில் பெரும்பாலும் விபிஎஃப் கட்டணம் கிடையாது. இங்கு தயாரிப்பாளர்கள் மீது கட்டணம் ஒரு சுமையாக செலுத்தப்படுகிறது. இந்த கட்டணத்தால் சிறுபட தயார...
எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் இசைஞானி வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் இசைஞானி வெளியிட்ட ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

HOME SLIDER, NEWS
  இசைமேதை' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாய...
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் கட்டுப்பாடு அதிகரிப்பு- மக்கள் உணவு கிடைக்காமல் அவதி! உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் இந்த நோய் வேகமாக பரவி பலரை காவு வாங்கியது. தற்போது உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பொதுமக்களை மீண்டும் பயமுறுத்தி வருகிறது. சீனாவில் கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு தற்போது இருந்து வருகிறது. இதனால் சீனாவில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சீனாவின் ஷான்சி மாகாணத்தின் தலைநகரான சியான் உள்பட பல நகரங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 3 நாட்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு ஒருவர் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால்...
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோவாவில் பிரமாண்ட சிலை! கால்பந்து என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடற்தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார். இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இந்தியாவை கிரிக்கெட் ஆக்கிரமித்த போதிலும், இங்கு கால்பந்து விளையாட்டுக்கு இன்னும் மவுசு குறையவில்லை. இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில் ‘‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை கோவா மாநிலம், இந்தியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த நிலை நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய குழந்தைக...
சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் தினமும் 30 ஆயிரம் திருப்பதி லட்டுகள் விற்பனை செய்ய ஏற்பாடு! வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 13-ந் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டு, 13-ந் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. 13-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 13-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை திருப்பாவை பாமாலை, அர்ச்சனை, நெய்வேத்தியம் சமர்பித்து பூஜைகள் நடைபெறும். 2 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்க...
தமிழர் திருநாளாய் மாறிய தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம!

தமிழர் திருநாளாய் மாறிய தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழர் திருநாளாய் மாறிய தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பையில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என அச்சிடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்னும் வாசகத்தை தற்போது நீக்கி ‛தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்' என குறிப்பிட்டுள்ளனர். எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பொங்கல் பையில் தமிழ் புத்தாண்டை திமுக அரசு நீக்கியிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேவையில்லாத பிரச்னைகள், சர்ச்சைகளை தவிர்க்க இதனை நீக்கியுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்....
தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் சமூக பரவலாக மாறிவிட்டதா ஒமைக்ரான்?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்! தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 12 நாடுகளில் மட்டுமே மிக அதிகமாக இருந்தது. எனவே அந்த நாடுகள் ஆபத்தான நாடுகள் என்றும் மற்ற நாடுகள் ஆபத்து குறைந்த நாடுகள் என்றும் வகைப்படுத்தப்பட்டன. ஆபத்து மிகுந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் 100 சதவீதம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரேண்டம் முறையில் 10 சதவீதம் பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. இதை 100 சதவீதமாக ஆக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதற்கான அனுமதி இன்னும் வரவில்லை. அதற்குள் கடந்த சில நாட்களாக சமூக பரவலாக மாறி உள்ளது. சென்னை அரசு ஆஸ்பத்திரியில் நோய...
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3-ந்தேதி தொடங்கி வைக்கிறார்! ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3-ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார். அதேபோல் 10-ந்தேதி முதல் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிக்கான முன் ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்படி 3-...