ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்! தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் மீண்டும் இன்று முதல் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் கூடும் இடங்களில் இருந்து தொற்று பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் நிரப்ப வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும் என்று விற்பனையாளர் சங்கம் அறிவித்து இருந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அடிப்படையில் பெட்ரோல் நிரப்ப வரும் வாகன ஓட்டிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இன்று காலையில் இருந்து சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று ஊழி...
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் கொரோனாவை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன! தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு குறைந்து வந்த நிலையில் கடந்த மாதம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி விட்டது. வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம், மற்ற மாநிலங்களில் அதிகரித்து வந்த கொரோனா வைரஸ் ஆகியவை காரணமாக தமிழகத்திலும் கொரோனா நோய் தொற்று இப்போது மிக வேகமாக பரவ தொடங்கி விட்டது. இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதையும் தாண்டி கொரோனா மிக வேகமாக பரவி விட்டது. தமிழகத்தில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து இருந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் எதுவும் பலன் அளிக்கவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக பிரசாரத்தில் கூடியதால் பலருக்கு கொரோனா தொற்று பரவியது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி விட்டது. கொரோனா பரிசோதனை தற்போது அ...
திருப்பதி ஏழுமலையானை போல்  நித்யானந்தாவின் காஸ்டியூம்..!

திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..!

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
திருப்பதி ஏழுமலையானை போல் நித்யானந்தாவின் காஸ்டியூம்..! சாமியார் நித்யானந்தாவின் புதிய புகைப்படங்களை கைலாச முகநூல் பக்கத்தில் நித்யானந்தா டீம் வெளியிட்டுள்ளது. உலகநாயகனுக்கு பிறகு விதவிதமான கெட்டப்புகள் அதிகம் போட்டவர் நித்யானந்தா தான் என்று இவரது சீடர்கள் பெருமையாக கூறுகின்றனர் ஒரு பக்கம் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை வேகமெடுக்க, மறுபக்கம், குஜராத் ஆசிரம வழக்கு நெருக்கடி ஏற்படுத்த, நித்யானந்தா எங்கே இருக்கிறார் என அவரது சீடர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். அவரோ, எங்கோ இருந்தபடி தினசரி தனது பேஸ்புக் பக்கம் மூலம் சீடர்களுக்கு அறிவுரைகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தா தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக மாற்ற ஐ.நாவுக்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல்...
மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

மூச்சுதிணறலால் அவதி… நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
மூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரான நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரியவந்...
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றால் அடுத்து ஊரடங்குதான்! தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  பொதுமக்கள் மாஸ்க் அணிவதை ஒழுங்குபடுத்தவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய கட்டுப்பாடுகள் நாளை அமலுக்கு வர உள்ள நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த வாரம் முதல் சராசரி நோய்த்தொற்று 3900 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.41 சதவீதம் என குறைவாகவே உள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 95.55 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 34.87 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மார்ச் 16 முதல் இதுவரை விதிகளை மீறியவர்களிடம் ரூ.2.88 கோடி அபராதம் வசூலிக்க...
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு!

சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 மாநகர பஸ்கள் இயக்க ஏற்பாடு! தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால் நாளை (10-ந்தேதி) முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களில் நின்று பயணம் செய்வதற்கு கண்டக்டர்கள் அனுமதிக்கமாட்டார்கள். தமிழகத்தில் 22 ஆயிரம் அரசு பஸ்கள் இருந்த போதிலும் கொரோனா பாதிப்பின் காரணமாக 15 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கூட்டம் குறைவாக இருப்பதால் பஸ்களும் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் 4 ஆயிரம் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசின் புதிய உத்தரவால் பய...
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி!

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி! கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகமாக பரவி வருவதையடுத்து தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இது அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியும் நோயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- தற்போது கொரோனா நோய் தொற்றின் 2-வது அலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்...
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வை பாதுகாப்புடன் நடத்த முடிவு! கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதன்பிறகு பிப்ரவரி மாதத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பிப்ரவரி மாத இறுதியில் இந்த 3 வகுப்பு மாணவர்களும் ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன் பிறகு அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நீடித்து வருகிறது. பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. பண்டிகைகள், தேர்தல் காரணமாக கடந்த 2-ந்தேதியில் இருந்து 6 நாட்கள் அவர்களுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பிளஸ்-2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் முழுமையாக...
தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்! மதுபான கடைகளுக்கு விலக்கு?

தமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்! மதுபான கடைகளுக்கு விலக்கு?

HOME SLIDER, NEWS, politics
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: * தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது. * திருமண நிகழ்வுகளில் 100 பேர...
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!

ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து! கொரோனா பரவல் எதிரொலி!! கொரோனா தொற்று பரவல் எதிரொலியால் ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் 12-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசம் தங்கும் விடுதியிலும், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்சிலும் ஏற்கனவே மொத்தம் 22 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பிறகு 7 ஆயிரம் தரிசன டோக்கன்கள் குறைக்கப்பட்டு, தற்போது 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவுவதால், தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் திருப்...