ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா?

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
நாளை ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? இங்கிலாந்தா? இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியா 66 ரன் வித்தியாசத்திலும், நேற்று நடந்த 2-வது போட்டியில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி புனேயில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கிறது. இதனால் ஒரு நாள் தொடரை கைப்பற்றுவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெஸ்ட், 20 ஓவர் தொடரைக் கைப்பற்றியது போல் ஒருநாள் தொடரையும் வென்று விட வேண்டு...
முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று!

முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று!

HOME SLIDER, NEWS, டிரைலர்கள்
முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கொரோனா தொற்று! இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் பிரபலங்கள் பலர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர். சமீபத்தில் நடிகர் மாதவன், நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு கொரோனா உறுதி ...
தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ!

தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை குஷ்பூ! தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 6ந்தேதி ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 2ந்தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பூ போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நுங்கம்பாக்கத்தில் உள்ள மேற்குமாட வீதியில் நடிகை குஷ்பூ இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.  திடீரென, உணவு விடுதி ஒன்றிற்குள் சென்ற அவர...
7 நாட்கள் வங்கிகளுக்கு  விடுமுறை!

7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! இன்று முதல் ஏப்ரல் 7-ந் தேதி வரையிலான 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும். மற்ற 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இன்று மாதத்தின் கடைசி சனிக்கிழமையாகும். ஞாயிற்றுகிழமையாகும். 29-ந் தேதி ஹோலி பண்டிகை. 31-ந் தேதி நிதியாண்டின் இறுதி நாளாகும். ஏப்ரல் 1-ந் தேதி வங்கி கணக்கு முடிக்கும் தினமாகும். 2-ந் தேதி புனித வெள்ளி. 4-ந் தேதி ஞயிற்றுக்கிழமை. இந்த 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும். இடையில் உள்ள மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 3 (சனிக்கிழமை) ஆகிய 2 தினங்களில் வங்கிகள் செயல்படும். 9 நாட்களில் 2 நாட்கள் மட்டுமே வங்கி பணி நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். சென்னையை சேர்ந்த வங்கி அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேட்டபோது, ஹோலி பண்டிகைக்கு விடுமுறை கிடையாது. வட மாநிலங்களில்தான் விடுமுறை. இதேபோல 31-ந் தேதியும் நிதியாண்...
சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா!

சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா! கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. 2-வது அலை மற்றும் புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியம், மத்திய பிரதேசம், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. முக்கிய பிரமுகர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெண்டுல்கர் கூறியதாவது:- சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நான் வீட்டில் தனிமையில் உள்ளேன். ...
மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் உருக்கமான பதிவு!

மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் உருக்கமான பதிவு!

HOME SLIDER, NEWS
மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி உமா சேதுராமன் உருக்கமான பதிவு! நடிகர் சந்தானத்துடன் இணைந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் சேதுராமன். இப்படத்தை அடுத்து வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். பிரபல தோல் சிகிச்சை மருத்துவரான இவர், பல்வேறு திரை பிரபலங்களுக்கும் தோல் ரீதியான மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்தார். கடந்த வருடம் மார்ச் மாதம் டாக்டர் சேதுராமன் இயற்கை எய்தினார். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் சேதுராமன் மறைந்து ஒரு வருடம் ஆனதையொட்டி அவரது மனைவி உமா சமூக வலைத்தள பக்கத்தில், “மா...அப்படிதான் நான் எப்போதும் உங்களை அன்பாக அழைத்திருக்கிறேன். இதுவரை உங்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கவில்லை. ஏனென்றால் எதிர்பார்ப்பில்லாமல் நீங்கள் இருப்பதற்காக நான் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன். என...
பாடகி ஆஷா போஸ்லேக்கு விருது!

பாடகி ஆஷா போஸ்லேக்கு விருது!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லேக்கு மராட்டிய பூஷண் விருதை மாநில அரசு அறிவித்து உள்ளது! புகழ்பெற்ற பின்னணி பாடகியான ஆஷா போஸ்லே மராட்டியத்தின் உயரிய விருதான மராட்டிய பூஷண் விருதுக்கு தேர்வாகி உள்ளார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான குழு 2020-ம் ஆண்டுக்கான இந்த விருதுக்கு ஆஷா போஸ்லேயின் பெயரை பரிந்துரை செய்துள்ளது. 1996-ம் ஆண்டு நிறுவப்பட்ட மராட்டிய பூஷண் விருது பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றும் சாதனையாளர்களுக்கு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. 1944-ம் ஆண்டு மராத்தி படத்தில் தனது முதல் பாடலை பாடினார் ஆஷா போஸ்லே. தொடர்ந்து பின்னணி பாடல் துறையில் ஜொலித்த அவர் பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவர் தனது இசை திறமைக்காக 2 முறை தேசிய விருதையும், 8 முறை பிலிம்பேர் விருதையும் வென்றுள்ளார்...
உடல் அமைப்பு குறித்து விமர்சனம் -வருத்தமடைந்த இலியானா!

உடல் அமைப்பு குறித்து விமர்சனம் -வருத்தமடைந்த இலியானா!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
உடல் அமைப்பு குறித்து விமர்சனம் -வருத்தமடைந்த இலியானா! தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமானவர் இலியானா. கேடி படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானா அளித்துள்ள பேட்டியில், “எல்லோரும் எனது உடல் அமைப்பு குறித்து விமர்சனம் செய்கிறார்கள். உடல் தோற்றத்தை வைத்து முன்பெல்லாம் இடுப்பழகி அன்று அழைத்தனர். இப்போது தோற்றம் மாறி இருப்பதால் வேறு மாதிரி விமர்சிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது. எனது உடல் தோற்றத்தில் எனக்கே அதிருப்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனாலும் விமர்சனம் செய்கிறவர்கள் என் உடம்பில் இருக்கிற அழகான விஷயங்களையும் கவனிக்க வேண்டும். எனது மூக்கு, உதடு அவ்வளவு அழகாக இருக்காது. எனது உயரமும் சரியானது இல்லை. கைகள் மிகவும் ஒல்லியாக இருக்கும். கலரும் குறைவுதான். ஆனால் அதற்காக நான் அழகாக இல்லை என்று சொல்லிவிட ம...
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே கேரளாவில் 3 தொகுதிகளை இழந்த பாஜக!

தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே கேரளாவில் 3 தொகுதிகளை இழந்த பாஜக!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே கேரளாவில் 3 தொகுதிகளை இழந்த பாஜக! கேரள சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ் கூட்டணிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா கட்சி 3-வது அணியாக களம் இறங்கி உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதா 115 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. பாரதிய ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன், நடிகர் சுரேஷ்கோபி, மெட்ரோ மேன் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா நேமம் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. வேட்பாளர்கள் 3 பேரின் மனுக்கள், வேட்பு மனு பரிசீலனையின் போது தள்ளுபடி செய்யப்...
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அடையாறு சாஸ்திரி நகரில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்! தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி நாளை (ஞாயிறு) சென்னை வருகிறார். காலை 11.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் ராகுல் அங்கிருந்து கார் மூலம் வேளச்சேரி வருகிறார். வேளச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானாவை ஆதரித்து அடையாறு சாஸ்திரி நகரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் சைதாப்பேட்டை தி.மு.க. வேட்பாளரும், தென்சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளருமான மா.சுப்பிரமணியன் கலந்து கொள்கிறார். ராகுல் பிரசார கூட்டத்தில் 10 ஆயிரம் பேரை திரட்ட ஏற்பாடுகள் நடக்கிறது. சென்னை பிரசாரத்தை முடித்து கொண்டு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு ராகுல் செல்கிறார். அங்கு மதிய உணவை அருந்தி விட்டு முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பிற்பகல் 2...