ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை ரத்தினபுரி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், கொரோனா நோய் தொற்று காலத்தில் முதலமைச்சர் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் எனவும், 2500 ரூபாய் பொங்கல் பரிசை மு.க. ஸ்டாலின் எப்படி தடுக்க நினைத்தாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் எனவும் தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த கேள்வி தேவையற்றது எனவும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் தெரிவித்தார்....
விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் புதிய தொடக்கம்

விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் புதிய தொடக்கம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, sports, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
  2020-ம் ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட்டுகளில் விராட் கோலி பதிவிட்ட அனுஷ்கா ஷர்மா கர்பமான செய்திதான் என ட்விட்டர் அறிவித்தது. அந்த அளவிற்கு அனுஷ்கா ஷர்மாவிற்கும் விராட் கோலிக்கும் குழந்தை பிறக்கும் செய்தி மகிழ்ச்சி அளித்திருக்கிறது. விரைவில் அம்மாவாகப்போகும் அனுஷ்கா ஷர்மா உலகப் பிரபலமடைந்த வோக் பத்திரிக்கைக்கு நிறைமாத வயிறுடன் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அதாவது 2021 ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகப்போகும் வோக் இந்தியா பத்திரிக்கையின் கவர் ஸ்டோரிக்கான நேர்காணலை அனுஷ்கா அளித்திருக்கிறார். அந்த நேர்காணலில் அனுஷ்கா தன்னுடைய கர்ப்பகால நாட்கள் குறித்து பேசியுள்ளார். பிறக்கப்போகும் குழந்தை மீது அனுஷ்காவும், விராட் கோலியும் கொண்டிருக்கும் அன்பு குறித்தும், உறவினர்கள் எந்த அளவிற்கு அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். கணவர் விரா...
தேர்தலில் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன்: சீமான்

தேர்தலில் மு.க. ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடுவேன்: சீமான்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவருக்கு எதிராக போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளர். சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலக்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு நாளையொட்டி இன்று (டிசம்பர் 30) அவரது படத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். நம்மாழ்வாருக்கு அஞ்சலி செலுத்திய பின் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “நஞ்சில்லா உணவு அதுவே நம் உணவு என்று போராடியவர் நம்மாழ்வார். எங்களை போன்றவர்களுக்கு இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவர் மறைந்தாலும் எங்களுக்குள் விதைக்கப்பட்டுள்ளார். அவர் மூலமாக பலர் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார்கள். ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். இதனை எனது ட்விட்டரிலும் பதிவு செய்த...
அதிமுகவை நிராகரிப்போம் என்ற பிரச்சாரத்தில் ஸ்டாலினின் பேச்சை எடிட் செய்து அவதூறு  பரப்பி வரும் ஹேட்டர்ஸ்! 

அதிமுகவை நிராகரிப்போம் என்ற பிரச்சாரத்தில் ஸ்டாலினின் பேச்சை எடிட் செய்து அவதூறு  பரப்பி வரும் ஹேட்டர்ஸ்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
அதிமுகவை நிராகரிப்போம் என்ற பிரச்சாரத்தில் ஸ்டாலினின் பேச்சை எடிட் செய்து அவதூறு  பரப்பி வரும் ஹேட்டர்ஸ்! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவறாக கணக்கு சொல்வதாக கிண்டல் செய்து ஒரு வீடியோவை சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால், அது எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதையும், உண்மையில் அவர் என்ன பேசினார் என்றும் தெரிந்துகொள்ளலாம். ஹேட்டர்ஸ்கள் வீடியோ எடிட்டிங் செய்து பதிவிடும் சில வீடியோக்களால் அரசியலில் ஒரு புயலையே உருவாக்கிவிடுகின்றனர். இதை ஆளும் கட்சி எதிர்க்கட்சி உதிரிக்கட்சிகள் என்று பாரபட்சமில்லாமல் அதன் ஆதரவாளர்கள் செய்யும் எடிட்டிங் வீடியோக்கள் பரபரப்பை உருவாக்கி விடுகின்றன. அதனை அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் என்றால் அப்படியான சர்ச்சை வீடியோக்கள் வெளியாகும்போது, அதைப் பற்றிய உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டியது. அவசியம். அதுவரை உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினை ஆற்றாமல் அதைப் பரப்புவதில் ஈடுபட...
துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கட்சியில் இணைத்து 2 மணிநேரத்தில் நீக்கிய பா.ஜ.க

துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கட்சியில் இணைத்து 2 மணிநேரத்தில் நீக்கிய பா.ஜ.க

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மோடி அரசு கடந்தாண்டு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடுமுழுவதும் கடும் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதேபோல் டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மற்றும் புறநகர் பகுதியில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை மோடி அரசு காவல்துறை - துணைராணுவம் கொண்டு கலைத்தது. அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையை ஏற்படுத்தும் நோக்கில், இந்துத்வா கும்பல் பல வகைகளில் முயற்சித்தது. அதில் ஷாகீன்பாக் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது கபில் பைஸ்லா என்ற கபில் குர்ஜார் என்பவர் போராட்டம் நடைபெற்ற இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். கடந்த பிப்ரவரி 1ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போர...
விவசாயிகளுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

விவசாயிகளுடனான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற 5 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து டெல்லியில் இன்று 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய வேளாண் துறையின் அழைப்பின் பேரில் 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் அரசுடனான இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பா.ஜ.க அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்கிற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டங்களில் திருத்தங்கள் வேண்டுமானால் மேற்கொள்ளலாம் என்று மீண்டும் மத்திய அரசு இன்றும் கூறியுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டமியற்ற வேண்டும் என்கிற விவசாயிகளுடைய கோரிக்கை தொடர்பாக ஒரு குழு அமைக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், அதனை விவசாயிகள் தரப்பில் ஏற்கவில்லை. விவசாயிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள் மீது இன்று எந்த முடிவும் எட்ட...
அவதூறு வழக்குகள் போட்டு தி.மு.க.வின் ஜனநாயக கடமையைத் தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது -மு.க.ஸ்டாலின்

அவதூறு வழக்குகள் போட்டு தி.மு.க.வின் ஜனநாயக கடமையைத் தடுக்கவும் முடியாது; மிரட்டவும் முடியாது -மு.க.ஸ்டாலின்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், மேலும் 6 அவதூறு வழக்குகள் தொடர்பான விசாரணையில் இன்று ஆஜரானார். அது தொடர்பாக சமூக வலைதளத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:- “இன்று "எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான" சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்த ஆறு அவதூறு வழக்குகளில் ஆஜரானேன். மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பல அவதூறு வழக்குகளை ரத்து செய்து அ.தி.மு.க. அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனாலும் இந்த அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. ஆளும்கட்சியின் தவறுகளை - ஊழல்களை விமர்சிப்பது ஒரு எதிர்க்கட்சியின் முக்கியக் கடமை. அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகம் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சில பத்திரிகைகள் ஆளும்கட்சியின் தவறுகளை எழுதுகின்றன. சில பத்தி...
பொங்கல் பரிசு டோக்கன் மூலம் சுய விளம்பரம் தேடும் அதிமுக -ஐகோர்ட்டில் திமுக மனு

பொங்கல் பரிசு டோக்கன் மூலம் சுய விளம்பரம் தேடும் அதிமுக -ஐகோர்ட்டில் திமுக மனு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
பொங்கல் பரிசு டோக்கன் மூலம் சுய விளம்பரம் தேடும் அதிமுக பொங்கல் பரிசு தொகையாக அரிசி அட்டைத்தாரர்களுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஜனவரி 4ஆம் தேதி முதல் பரிசு தொகை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த டோக்கனில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களின் படங்கள் மற்றும் அதிமுக கட்சியின் சின்னம் பெற்றுள்ளது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மக்கள் வரிப்பணத்த்தில் அரசு சார்பில் செயல்படுத்தப்படும் இந்த பொங்கல் பரிசு தொகை திட்டத்தில் வழங்கப்படும் டோக்கன் மூலமாக அதிமுக கட்சியினர் சுய விளம்பரம் தேடி கொள்வது தேர்தல் ஆணைய அறிவிப்பாணைக்கு எதிரானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த டோக்...
புத்தாண்டு கொண்டாட தடை நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை மூடப்படும்!

புத்தாண்டு கொண்டாட தடை நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை மூடப்படும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் உள்ளிட்ட மாநகரங்களில் புத்தாண்டு கொண்டாட கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழகம், மகராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட தடைகள் விதிக்கப்பட்டுள்ளம. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நட்சத்திர விடுதிகளில் கொண்டாட்டங்கள், மெரினா கடற்கரையில் கூடுதல் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதிகளில் மதுபான பார்களை நாளை இரவு 10 மணி முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல நாளை இரவு 10 மணி முதல் மெரினா கடற்கரை மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையின் பிரதான பகுதிகள், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் காவல் பணியில் காவலர்கள் ஈடு...
என்றைக்குமே ஓடிடி ஹீரோவாக இருக்க வேண்டும் சூர்யாவை மறைமுகமாகச் சாடிய ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்

என்றைக்குமே ஓடிடி ஹீரோவாக இருக்க வேண்டும் சூர்யாவை மறைமுகமாகச் சாடிய ‘ரோகிணி’ பன்னீர்செல்வம்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
என்றைக்குமே ஓடிடி ஹீரோவாக இருக்க வேண்டும் சூர்யாவை மறைமுகமாகச் சாடிய ‘ரோகிணி’ பன்னீர்செல்வம் ஜனவரி 13-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 800 திரையரங்குகளுக்கும் அதிகமாக ‘மாஸ்டர்’ வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் செயலாளரும், ரோகிணி திரையரங்க உரிமையாளருமான பன்னீர்செல்வம் பேசியதாவது: “நடிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து தமிழக முதல்வரைச் சந்திக்கவுள்ளோம். அதற்குள் தமிழக முதல்வர் நல்ல செய்தியைச் சொல்வார் என்று நம்புகிறோம். ‘காட்டேரி’ படத்துக்காக ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒரு தவறான அணுகுமுறை. அந...