தனுஷ் நடிக்கும் ‘கர்ணன்’ தலைப்ப மாத்து கொந்தளித்த நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை!!
CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ‘கர்ணன்’. இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது.
படத்தின் அடுத்த கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்திற்கு ‘கர்ணன்’ டைட்டில் வைக்கக் கூடாது என நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை தனுஷிற்கு வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுகுறித்து தனுஷிற்கு பேரவையின் தலைவர் சந்திரசேகரன் எழுதியுள்ள கடிதத்தில் ,
”தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம். நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான்.
ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீ...









