ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. தமிழகம் முழுதும், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, நவம்பர், 16ல் துவங்கியது. அன்றைய தினம், அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, வரும், 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வாக்காளர்கள் வசதிக்காக, கடந்த மாதம், 21, 22ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் சிறப்பு முகாம் நடந்தது.   கடந்த, 21ம் தேதி நடந்த முகாமில், 5.43 லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றன. இதில், 4.38 லட்சம் விண்ணப்பங்கள் பெயர் சேர்க்கக் கோரி வரப்பெற்றுள்ளன. அதேபோல, 22ம் தேதி நடந்த முகாமில், 8.03 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதில், 6.14 லட்சம் பேர், பெயர் சேர்க்கக் கோரி விண்ணப்பித...
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் ரூ.50 லட்சம் இழப்பீடு தரக் கோரி  சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
  பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தம்மை வெளியேற்றியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு கோரி  இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.  அவரை சமீபத்தில் பிரசாத்  ஸ்டூடியோ நிர்வாகம் அங்கிருந்து வெளியேற்றி உள்ளது.   மேலும் ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை அவர் எடுத்துச் செல்லவும் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.   இது குறித்து இளையராஜா சென்ன உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்    சுமார் 35 வருடங்களாக பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் இசையமைத்து வந்த தன்னை வெறியேற்றிவிட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். தமக்கு இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க, ஸ்டூடிய...
போயஸ்கார்டன் பகுதியில் விதவிதமான போஸ்டர்களை ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

போயஸ்கார்டன் பகுதியில் விதவிதமான போஸ்டர்களை ஒட்டிய ரஜினி ரசிகர்கள்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  புதிதாக தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் ரஜினிகாந்த் நியமித்தார். தற்போது தனது புதிய கட்சியை பதிவு செய்வது தொடர்பாக வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் ஆகியோருடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்றும் போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்தில், இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 71-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் வருவது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது. இதன் காரணமாக ரஜினியின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோ பூஜை, கோவில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை இன்று மேற்கொ...
தன்னகரில்லா தமிழகத்தை உருவாக்குவோம்; உருவானது “மை இந்தியா பார்ட்டி”!

தன்னகரில்லா தமிழகத்தை உருவாக்குவோம்; உருவானது “மை இந்தியா பார்ட்டி”!

NEWS
இந்தியாவின் முன்னணி நிறுவனமான எஸ்எல்ஓ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் அணில் குமார் ஓஜா, தொழில்துறை மட்டுமின்றி சமூகப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். புல்லாதேவி அறக்கட்டளையின் அறங்காவலரான அணில் குமார் ஓஜா, இந்த அறக்கட்டளையின் மூலம் மக்களுக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் கல்விச் சேவையில் பல காலம் தொண்டாற்றி வருகிறார். தமது தொழிலில் மாற்றத்தை கொண்டுவந்து முன்னேற்றத்தை கண்ட அணில் குமார் ஓஜா, தற்போது அதே முன்னேற்றத்தை தமிழகத்திலும் ஏற்படுத்தி, தமிழ்நாட்டையும் தமிழக மக்களையும் முன்னேற்றப் பாதைக்கு அழைத்து செல்ல புதிய திட்டங்களுடன் மை இந்தியா பார்ட்டி (எனது இந்தியா கட்சி) எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். ‘போதும்!… போதும்!!… ஏமாந்தது போதும்!!!…’ என்ற கோஷத்தை முன்வைத்து தொடங்கப்பட்டுள்ள இந்த கட்சியின் கனவுத் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வருமாறு: அ...
அதிமுக ஊழல் லிஸ்ட் போடும் உதயநிதி!

அதிமுக ஊழல் லிஸ்ட் போடும் உதயநிதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள திமுக ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கையும், அதிமுக ஆ.ராசாவின் 2ஜி வழக்கையும் பற்றி தொடர்ந்து பேசி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று தன் மீது ஊழல் புகார் இல்லை என ஆ.ராசா விளக்கமளித்ததுடன், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நிலையில், அதிமுகவினர் திமுகவின் ஊழல்கள் குறித்தும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “முட்டை ஊழல் - குட்கா ஊழல் - நெடுஞ்சாலை ஊழல் - டெண்டர் ஊழல் - போலி நிறுவன ஊழல் - மணல் குவாரி ஊழல்- மின்சார கொள்முதல் ஊழல்- ஆவின் ஊழல் - நெல் கொள்முதல் ஊழல் - கொரோனாவிலும் ஊழல்... என சத்துணவ...
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு இலவச டீசல்!

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு இலவச டீசல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்கும் வாகனங்களுக்கு இலவச டீசல்! மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பஞ்சாப் அரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் டெல்லியே குலுங்கும் அளவிற்கு நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் தன்னார்வ அமைப்புகளும் பொதுமக்களும் தனியார் அமைப்புகளும் கூட இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் விவசாயிகளுக்கு விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க செல்லும் வாகனங்களுக்கு டெல்லி-அமிர்தசரஸ் தேசிய நெடுஞ்சாலையில் இலவச டீசல் வழங்கப்பட்டு வருகிறது. சிரோமணி அகாலி தளம் கட்ச...
பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

பிரமீடு அருகே எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படம் எடுத்த மாடல் அழகி கைது

CINI NEWS, HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், சினி நிகழ்வுகள், நடிகைகள்
  எகிப்து நாட்டில் மாடலிங் துறையில் பிரபலமானவர் சல்மா அல்-ஷைமி. மாடல் அழகியான இவர் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமிலும் மிகவும் பிரபலநபராக இருந்துவந்தார். இதற்கிடையில், சல்மா அல்-ஷைமி கடந்த வாரம் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் 4 ஆயிரத்து 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த டிஜொசெர் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்றுள்ளார். தனது புகைப்படக்கலைஞருடன் பிரமீடுகள் அமைந்துள்ள இடத்திற்கு சென்ற அவர் அங்கு எகிப்தின் பண்டைய கால உடையணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். தான் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சல்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. மேலும், எகிப்தின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை மீறி பிரமீடு பகுதியில் கவர்ச்சியான முறையில் புகைப்படங்கள் எடுத்ததாக சல்மா மீது குற...
“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது இழிவு”  –  ஆ.ராசா காட்டம்

“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது இழிவு” – ஆ.ராசா காட்டம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
“தண்டிக்கப்பட்ட குற்றவாளியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவது அருவருப்பு கலந்த இழிவு” - ஆ.ராசா காட்டம் தமிழக முதலமைச்சருக்கு, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., செய்தியாளர் சந்திப்பின் மூலம் வெளியிட்ட திறந்த மடல். அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும் தலைவர் கலைஞர் மீதும் - மத்திய அமைச்சராக பணியாற்றி 2ஜி வழக்கை எதிர்கொண்டு வெற்றி பெற்ற என்மீதும் கடந்த 03.12.2020 அன்று தொலைக்காட்சியில் தாங்கள் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறும் விதமாக அதே தேதியில் நானும் ஊடகங்களை சந்தித்து யார் ஊழல்வாதி, எந்தக் கட்சி ஊழல் கட்சி என்பதை பகிரங்கமாகவும் பட்டவர்த்தனமாகவும் ஆதாரத்தோடு குறிப்பிட்டு தி.மு.கழகத்தின் மீது தாங்கள் தெரிவித்த வீராணம், சர்க்காரியா, 2ஜி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எவையும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லையென்றும், ஆனால் உங்களால் ‘அம்மா’ என்று சுயநலக் காரியங்களுக...
ரஜினி அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP ஜோதிமணி காட்டம்! 

ரஜினி அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP ஜோதிமணி காட்டம்! 

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ரஜினிகாந்த் அரசியல் மக்கள் அவரை நம்பி வாக்களிக்க மாட்டார்கள் கரூர் MP  ஜோதிமணி காட்டம்! உலகத்திலேயே அரசியல் ஆயுதமாக ஆபாசத்தையும் வக்கிரத்தையும் பயன்படுத்துவது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு தான், மக்கள் விரோத பா.ஜ.க அரசுக்கு இங்குள்ள அ.தி.மு.க அரசு கூசாமல் துணை நிற்கிறது என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பெற்றார். அப்போது மதியநல்லூரில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 100 நாள் வேலை செய்யும் பெண்களை சந்திக்கச் செல்லும்போது பள்ளியின் கதவு திறக்கப்படாமல் மூடி இருந்ததால் ஆத்திரமடைந்த எம்.பி ஜோதிமணி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சொக்கலிங்கத்திடம் சென்று எங்கள் கட்சியை சேர்ந்த நிர்வாக...
பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  நீதிமன்ற தடை உத்தரவை மீறி மெட்ராஸ் கேனைன் கிளப்பை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகளை நியமித்த பத்திரப்பதிவு துறை செயலாளர் பீலா ராஜேஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள நாய்கள் பராமரிப்பு கிளப் (மெட்ராஸ் கேனைன் கிளப்) நிர்வாக நடவடிக்கைகளில் நிதி முறைகேடுகள் நடந்ததாக கூறி, சிறப்பு அதிகாரிகளை நியமிக்க பத்திரப்பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை எதிர்த்து அந்த கிளப் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நோட்டீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அந்த கிளப்பிற்கு 3 சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து பத்திரப்பதிவு துறை உத்தரவிட்டிருந்தது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மெட்ராஸ் கேனைன் கிளப் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்...