ஹர ஹர மஹாதேவகி “A” வாங்கியது ஏன் இயக்குனர் விளக்கம்..!
கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹர ஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குனர் சந்தோஷ் க.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, இந்த காலத்து இளைஞர் களுக்கு பிடித்த வகையில் ஹர ஹர மஹாதேவகி படம் உருவாக்கப்பட்டுள்ளது. கவுதம் கார்த்திக்கும், நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் முறிவு ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களே படத்தின் கதை.
கொஞ்சம் விரிவா சொல்லணுமுன்னா 18வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்க வேண்டிய பொழுதுபோக்கான காமெடி படம். சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் பெற்றப்படம். அதுனாலே குடும்பதோடு பார்ப்பது அவரவர் விருப்பம். இப்படத்துலே புதுமையான ஒன்றை இப்படத்தில் முயர்ச்சித்துள்ளோம்.
அதாவது முத்தக்காட்சி, கவர்ச்சி உடை அணிவது ஆபாசம். நண்பர்களால் பொது இடத்தில் பேச முடியாத ஒன்றை இயல்பாக பேசிக்கொள்வதுதான் இப்படத்தின் கதை. இப்படத்தை ...









