150 ஆண்டுக்குப்பின் நீல நிற சந்திர கிரகணம்;ஜனவரி 31-இல் பார்க்கலாம்…!
150 ஆண்டுகளுக்குப் பிறகு- அரிதான முழு சந்திர கிரகணம், ஜனவரி 31-ஆம் தேதி ஏற்படுகிறது. ‘நீல நிலா’ என்று அழைக்கப்படும் இந்த சந்திர கிரகணத்தை, வெறும் கண்களால் காணலாம்.
2018-ஆம் ஆண்டில் அடுத்தடுத்து ஒன்றிற்கு மேற்பட்ட முறைகள் சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு (super blue blood) நிலவு வானில் தோன்றவிருப்பதாக நாசா தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் புத்தாண்டில் ஜனவரி முதல் தேதியில் ஒன்றும், ஜனவரி 31-ஆம் தேதி மற்றொன்றுமாக சூப்பர் ப்ளூ ப்ளடு நிலவு தோன்ற உள்ளது.
ஜனவரி 1-ஆம் தேதி பவுர்ணமி என்பதால் வழக்கமான நிலாவை விட பெரிய அளவிலான சூப்பர் நிலா தெரிந்தது. ஜனவரி 31-ஆம் தேதியன்று பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் என்பதால் நீல நிலா தோன்ற உள்ளது.
இது போல ஒரு நீலநிற சந்திரகிரகணம் கடைசியாக மார்ச் 31, 1866-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. என்பது குறிப்பிடத்தக்கது.2018-ஆம் ஆண்டின் முதல் சந்திரகிரகணம் இது. ஜனவரி 31-ஆம் தேதி ந...









