மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு!
மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு!
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் தனது கணவர் அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க தன்னை வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் தன்னை கொடுமை படுத்துவதாகவும் கூறியிருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தபெண்ணின் கணவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும்,அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் உல்லாச விடுதிகளில் ஒன்று கூடி மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருப்பதாக கூறினார்.
இதற்காக கேரளாவை மையமாக கொண்டு 20 மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதும், இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்...









