செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

நாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

நாளை முதல் டிரைலர்… அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது “பசும்பொன் தேவர் வரலாறு”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள்
  நாளை முதல் டிரைலர்... அக்டோபர் 30ம் தேதி டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிறது "பசும்பொன் தேவர் வரலாறு"   நேதாஜியோடு இணைந்து தேச விடுதலைக்கு பாடுபட்ட தென்னாட்டு நேதாஜி தேசிய தலைவர் பசும்பொன் சிங்கம் அய்யா முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை "பசும்பொன் தேவர் வரலாறு" என்ற பெயரில் கடந்த 2008ம் ஆண்டு திரையரங்குகள் மூலம் வெளியிட்டோம். அதுவரை அவர் தொடர்பான எந்த ஒரு படைப்பும் வரவில்லை. எங்களின் "பசும்பொன் தேவர் வரலாறு" ஆவண படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதோடு, உலக அளவில் ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவண படம் தியேட்டரில் வணிக ரீதியில் வெளியாகி வந்த ஒரே படம் என்ற பெயரையும் பெற்றது. இப்போது அந்த படத்தின் டிஜிட்டல் வடிவம் வரும் அக்டோபர் 30 தேதி இணையத்தில் முதல் முறையாக வெளியாக உள்ளது. முன்னதாக நாளை 29.10.20 அன்று மதியம் 1 ...
சாத்தான் குளம் இரட்டைக் கொலையில் முதல்வரின் பொய் தகவல் அம்பலம் – ஸ்டாலின் அறிக்கை

சாத்தான் குளம் இரட்டைக் கொலையில் முதல்வரின் பொய் தகவல் அம்பலம் – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட தி.மு.க. மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சிவராம பெருமாள், டி.எஸ்.பி. ஒருவரின் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்டிருப்பதும், சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் இரட்டைக் கொலை வழக்கினை விசாரித்த சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் கூறியுள்ள தகவல்களும் பேரதிர்ச்சியளிக்கின்றன. சிவராம பெருமாள் கொரோனா காலத்தில் மக்களுக்கு மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு மருத்துவர். அவரை அம்மாவட்டத்தில் உள்ள டி.எஸ்.பி. பாஸ்கர் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டி அவரது கண்ணெதிரிலேயே அவருடைய மனைவியைத் தரக்குறைவாக அவதூறாகப் பேசியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. சாத்தான்குளம் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., ‘கொலையுண்ட ...
சரிந்த செல்வாக்கை மீட்க 2021 தேர்தலில் பாமக தனியாக நிற்க முடிவு?

சரிந்த செல்வாக்கை மீட்க 2021 தேர்தலில் பாமக தனியாக நிற்க முடிவு?

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், வீடியோ
    சரிந்த செல்வாக்கை மீட்க 2021 தேர்தலில் பாமக தனியாக நிற்க முடிவு? https://youtu.be/4JMZNmjzCLY
இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் பாஜ அரசு – வைகோ அறிக்கை

இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் பாஜ அரசு – வைகோ அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
இந்தியக் கூட்டு ஆட்சித் தத்துவத்தின் மீது வெடிகுண்டு வீசும் பாஜ அரசு - வைகோ அறிக்கை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நடுவண் அரசின் நல்வாழ்வுத்துறையின் கீழ் ஸ்வஸ்த ஏவம் ஜன் கல்யாண் சன்ஸ்தான் என்ற கிளை அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு, இந்தியா முழுவதும் கிராமப் புறங்களில் நல்வாழ்வுப் பணிகளை மேற்கொள்கின்றது. அடிப்படை வசதிகளைச் செய்கின்றது. இதில், கணக்கர்கள், எழுத்தர்கள், கணினிப் பதிவர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஓட்டுநர்கள், செவிலியர்கள் 13,000 பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை, கடந்த அக்டோபர் 7-ம் நாள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. விண்ணப்பம் தருவதற்கான கடைசி நாள் அக்டோபர் 8 முதல் அக்டோபர் 24 வரை என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். ஒரு தேதியைக் குறிப்பிட்டு வரையறுக்காத இந்த நடவடிக்கை, அப்பட்டமான முறைகேடு ஆகும். இந்த...
நடிகர் விஜய்  மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில், நடிகர் விஜய் திடீரென மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த கூட்டத்தில், மாவட்ட நற்பணி மன்றங்கள் தன்னை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டுவதை அவர் கண்டித்ததாகவும், அத்தகைய போஸ்டர்கள் ஒட்டுவதை தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மக்கள் பணிகளை, மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என அறிவுறுத்திய விஜய், வழக்கம்போல் தேவையான உதவிகள் என்னிடம் இருந்து வரும் என உறுதியளித்தாராம்...
கபில் தேவின் உடல்நிலை சீராக உள்ளது!

கபில் தேவின் உடல்நிலை சீராக உள்ளது!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கபில் தேவின் உடல்நிலை சீராக உள்ளது! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான கபில் தேவுக்கு , நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து டெல்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கபில் தேவின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.     கபில் தேவ் விரைவில் நலம் பெற வேண்டும் என அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.   இந்நிலையில், கபில் தேவ் தனது உடல்நிலை சீரடைந்து வருவது தொடர்பான தகவலை வெளியிட்டு, தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘என்மீது கொண்டுள்ள அளவுகடந்த அன்பு மற்றும் அக்கறைக்கு அனைவருக்...
திருமாவளவன் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெறுக – ஸ்டாலின் அறிக்கை

திருமாவளவன் மீது போடப்பட்ட பொய்வழக்கை திரும்ப பெறுக – ஸ்டாலின் அறிக்கை

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  "விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள் பேசியதைத் திரித்து, சமூகவலைதளங்களில் பரப்பி வன்முறையைத் தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது; உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் மீது, எடப்பாடி அ.தி.மு.க. அரசின் சைபர் கிரைம் போலீசார், ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்திருப்பது முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையின் பாரபட்சமான - வன்மம் நிறைந்த அணுகுமுறையையே காட்டுகிறது. தொல்.திருமாவளவன் அவர்கள், ஐரோப்பிய பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் சார்பில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் பங்கேற்று, தந்...