ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி, ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி, ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் - அரவிந்த் கெஜ்ரிவால்
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி, ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
82 சதவிகித தொற்று பாதிப்பு டெல்லி, தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது.
தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, நோயாளிகளுக...









