உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி உத்தரவு
உயிரிழந்த 4 மீனவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி- முதல்வர் பழனிசாமி உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மெசியா (30), உச்சிப்புளி யைச்சேர்ந்த நாகராஜ் (52), செந்தில்குமார் (32), மண்டபத்தைச் சேர்ந்த சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 பேர் மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்கரையில் இருந்து 8 கடல் மைல் தொலைவில் (15 கி.மீ.) மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து தப்பி செல்வதற்காக அங்கிருந்து வேகமாக புறப்பட்டபோது, மீனவர்களின் விசைப்படகு இலங்கையின் ரோந்து கப்பல் மீது மோதியதாக கூறப்பட்டது.
இதில் படகுடன் சேர்ந்து மீனவர்கள் 4 பேரும் மூழ்கினர். அவர்களை பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே கரை திரும்பிய கோட்டைப்பட்டின...









