ஆக்சிஜன் இல்லா மரணம்.. இனப்படுகொலைகளுக்கு சமமானது – அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டம்
ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் தட்டுப்பாடுகளினால் கொரோனா நோயாளிகள் மரணமடைவது இனப்படுகொலைகளுக்கு குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் காட்டமாக கூறியுள்ளது
கொரோனா பரவல் மற்றும் கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்கள் நிலவரம் குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, ஆக்சிஜன் சப்ளை தட்டுப்பாடுகளினால் மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பது எங்களுக்கு வலியை தருகின்றது, இது குற்றச்செயல், இனப்படுகொலைக்கு சற்றும் குறைந்ததல்ல
நாம் எப்படி நம் மக்களை இப்படி சாக விடலாம். அதுவும் விஞ்ஞானம் இவ்வளவு முன்னேற்றம் அடைந்த நிலையில் இருதய மாற்று அறுவை சிகிச்சை, மூளை அறுவை சிகிச்சையெல்லாம் வெற்றிகரமாக நடைபெறும் போது இதில் நாம் இப்படி அசட்டையாக இருக்கலாமா? என உத்தரபிரதேச அரசுக்கு நீ...









