ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கியவர்களுக்கு ‘போலி’ தங்கக்காசு – புதிய சர்ச்சையில் முதல்வர் எடப்பாடி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியில், 710 காளைகள், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேலும் காளைகளை அடக்கிய மாடு பிடி வீரர்களுக்கு தங்கக்காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதில், மதுரை மாவட்டம், குறவன்குலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் விஜயன் என்பவர் 8 மாடுகளை பிடித்துள்ளார். அதனால் அவருக்கு நான்கு தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.
இந்நிலையில் பரிசாகப் பெற்ற தங்கக்காசுகளை விஜயனின் தந்தை கணேசமூர்த்தி பரிசோதனை செய்வதற்காக அருகில் உள்ள நகைக்கடைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கக்காசுக பரிசோதனை செய்யக்கொடுத்ததில், அந்த தங்கக்காசுகள் தரமற்றவையாக இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இதுதொடர்பாக கணேசமூர்த்தி கூறுகையில், “எனது மகன் காளைகளை அடக்கியதால், ஒரு கி...








