செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
2-ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு! தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளில் 14,662 பதவிகளுக்கு கடந்த 6-ந்தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. அன்று 77.43 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. இந்த 9 மாவட்டங்களிலும் 2-ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6,652 வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். கிராம பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு தனித்தனியாக வாக்குகளை செலுத்தினர். 35 ஊராட்சி ஒன்றியங்களுக்...
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆயுத பூஜை கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு பஸ்கள் இயக்கம்- அமைச்சர் ராஜகண்ணப்பன்! ஆயுத பூஜை பண்டிகை வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. 15-ந்தேதி விஜயதசமி வருகிறது. தொடர்ச்சியாக சனி, ஞாயிற்றுக்கிழமை வருவதால் பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவார்கள். இதை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் சிறப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதால் பயணிகள் நெரிசல் மூலம் மீண்டும் தொற்று பரவல் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் போக்குவரத்துத்துறை கவனமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு அதிகளவில் பயணம் செய்வதை தவிர்க்க கூடுதல் பஸ்கள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல ஆயுத பூஜைக்காக வெளியூர் செல்லும் பயணிகள் கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஒரே இடத்தில் குவிவதை தடுக்கவும் ஏற்...
நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை!

நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
நாளை மகாளய அமாவாசை: தமிழகம் முழுவதும் கோவில்களில் தர்ப்பணம், தரிசனத்துக்கு தடை! மகாளய அமாவாசை தினத்தில் புண்ணியதலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி எள், தண்ணீர் ஆகியவற்றை இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்கள் வழிபாட்டில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகாளய அமாவாசை தினத்தில் தமிழகம் முழுவதும் பிரபலமான கோவில்கள் மட்டுமின்றி சின்ன கோவில்கள் மற்றும் நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா கட்டுப்பாடு காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. வாரத்தில் மற்ற நாட்கள் கோவில்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசை புதன்கிழமை வருவதால் கட்டுப்பாடு இருக்காது. எனவே தர்ப்பணம் கொடுப்பதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று பொது மக்கள் கருதினர். இந்த நிலையில் நாளை...
விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற வீடியோவை காட்டி மோடியை சாடிய பிரியங்கா காந்தி

விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற வீடியோவை காட்டி மோடியை சாடிய பிரியங்கா காந்தி

HOME SLIDER, kodanki voice, NEWS, வீடியோ
  #priyankagandhi #panjabistatus #modi விவசாயிகள் மீது அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற வீடியோவை காட்டி மோடியை சாடிய பிரியங்கா காந்தி   https://youtu.be/roA3QGXyQ24
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம்! தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நடிகர் வினய், சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர், ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களை ஆபிரகாம் (கோடங்கி) வரவேற்றார். நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி கவிதா பேசும் போது, "நிறைய நடிகர்களை நாம் தினம் சந்திக்கிறோம். ஆனால் சிலர் பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் ஒரு நல்ல புரிதலோடு உறவுகளோடு பழகுவார்கள். அவர்களில் ஒருவர் தான் வினய் ''உன்னாலே உன்னாலே'' படத்திலிருந்து எப்படி அவரை சந்தித்தேனோ அன்று முதல் இப்போது வெளியாக உள்ள டாக்டர் படம் வரைக்கும் அவருடைய இயல்பும் குணமும் மாறவில்லை. இரண்டு தடவை வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய்...
பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்!

Assembly news, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
பள்ளிகள் திறப்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை- பள்ளி கல்வித்துறை அமைச்சர்! திருச்சி மாவட்ட நேரு யுவகேந்திரா, என்.என்.எஸ். திட்டம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் இந்திய 75-வது ஆண்டு சுதந்திர தின ஓட்டம், இன்று(சனிக்கிழமை) நடந்தது. திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் பழைய தபால் நிலையத்திற்கு முன்பு அமைந்துள்ள உப்பு சத்தியாகிரக நினைவுதூண் பகுதியில் விழா நடந்தது. கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டப் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே அனைத்து மாவட்டகல்வி அதிகாரிகளிடமும் கருத்து கேட்கப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம...
பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்!

பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள், விளையாட்டு செய்திகள்
பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்! ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 7 ரன்கள் சேர்த்தார். டி காக் 19 ரன்னில் வெளியேறினார். இதுவரை சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் இன்று நம்பிக்கையுடன் விளையாடினார். இருந்தாலும் 26 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் மந்தமான நிலையிலேயே உயர்ந்தது. சவுரப் திவாரி 15 ரன்னிலும், பொல்லார்டு 6 ரன்னில் ஆட்டமிழந்தனர். 6-வது...
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: பயங்கரவாதி சுட்டுக்கொலை! ஜம்மு-காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் உள்ள ரகமா பகுதியில் போலீசார் மற்றும் பாதுகாப்புப்படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையில் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது....
அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு!

அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அனைத்து மதுபானக்கடைகளும் நாளை மூடப்படும் : சென்னை கலெக்டர் அறிவிப்பு! சென்னை கலெக்டர் விஜயாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அக்டோபர் 2-ந் தேதி (நாளை) காந்தி ஜெயந்தியையொட்டியும், 19-ந் தேதி மிலாதுநபி தினத்தன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகளும், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் அனைத்து பார்களும் மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது....
தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு! பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினமும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கலக்கமடைந்துள்ளனர். சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து 99.36 ரூபாய்க்கும்,  டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து 94.45 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. அதே சமயம் ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94...