சிவில் சர்வீஸ் தேர்வில் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி வெற்றி..!
சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு முடிவு வெளியானது. இதில் மனிதநேய மையத்தில் படித்த 57 பேர் தேர்ச்சி பெற்றனர். அண்ணாவின் கொள்ளு பேத்தி பிரித்திகா ராணி வெற்றி பெற்றார்.
முதன்மை தேர்வு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வு நடைபெறும். அந்த வகையில் சிவில் சர்வீசஸ் பணிகளில் 896 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந்தேதி வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் நாடு முழுவதும் 11 ஆயிரத்து 845 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 610 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
முதல்நிலை தேர்வில் வெற்றி பெ...









