சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட மோப்பநாய் ‘ரேம்போ’

காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட மோப்பநாய் ‘ரேம்போ’

HOME SLIDER, NEWS, செய்திகள்
    திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் பல்வேறு வழக்குகளில் திறமையாக துப்பறிந்த மோப்ப நாய் ரேம்போ உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. இந்நிலையில், உடல் நல்லடக்கம் செய்யும் இடத்தில் நினைவு கூறும் வகையில் பலகை நடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் பிறந்து 57 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் கடந்த 2009-இல் ரேம்போ பணியில் சேர்க்கப்டடது. இந்நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக சுமார் 257 குற்ற சம்பவங்களில் குற்ற புலனாய்வுக்கு பயன்படுத்தப்பட்டு மோப்பநாய் ரேம்போ சேவை புரிந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மோப்ப நாய் ரேம்போவிற்கு பணி ஓய்வு அளிக்கப்பட்டது. ஆனால், ஓய்வுக்குப் பிறகும் திருவள்ளூர் மாவட்ட துப்பறியும் மோப்பநாய் படைப்பிரிவில் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே ரேம்போ உடல்நலக் கு...
பரிசாக கிடைத்த காரை நிறுத்த வீட்டில் இடமில்லை – புலம்பும் அவனியாபுர ஜல்லிக்கட்டு வீரர்!

பரிசாக கிடைத்த காரை நிறுத்த வீட்டில் இடமில்லை – புலம்பும் அவனியாபுர ஜல்லிக்கட்டு வீரர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் கடந்த 14-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் 26 காளைகளை அடக்கினார். அவருக்கு சிறந்த மாடுபிடி வீரருக்கான முதல் பரிசாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரில் வழங்கப்பட்ட காரை அமைச்சர் மூர்த்தியிடம் இருந்து பெற்றார். மாடுபிடி வீரர் கார்த்திக் கூறியதாவது:- பெரும்பாலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மிகவும் கஷ்டப்படக் கூடியவர்களாகவும், அன்றாடும் சாப்பாட்டுக்கே போராடக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். கிரிக்கெட், ஹாக்கி, கைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள். என்னை போன்று மாடுபிடி வீரர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் தான் அதிகம். எனக்கு குடியிருக்க வீடு இல்லை. &n...
வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை… தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்! 

வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை… தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்! 

HOME SLIDER, NEWS, செய்திகள்
  வாட்ஸ் அப் குழுவால் கிடைத்த நன்மை... தொலைந்து போன தங்க நகைகள் மீட்கப்பட்ட அதிசயம்! சென்னை வேப்பேரியைச் சேர்ந்தவர் மஹிபால். நகை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 17ஆம் தேதி  வேப்பேரியில் உள்ள தன் வீட்டிலிருந்து 365 கிராம் நகையை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஆட்டோவில் ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த போது நகைகள் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தொலைந்து போன நகைகளை மீட்பதற்கு மஹிபால் சாதுரியமான முயற்சியும் மேற்கொண்டுள்ளார். தொலைந்து போன நகைகளை எடுப்பவர்கள், நகைக்கடை அல்லது நகை அடகு கடையில் தான் விற்க முற்படுவார்கள் என்ற அடிப்படையில், சென்னையில் ...
‘விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்!

‘விடுதலை போரில் தமிழகம்” என்ற தலைப்பில் குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல்
    ஜனவரி 26ம் தேதி நாடு முழுவதும் 75வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவையொட்டி புது டெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் தமிழக அரசு சார்பில் பங்கேற்க இருந்த அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்தது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசு சார்பில் அனுமதி மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தின கொண்டாட்டத்தில் இடம்பெறும் எனவும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் இந்த அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக தெரிவித்திருந்தார...
சிறையிலிருக்கும் ஹரி நாடாரை சொந்தம் கொண்டாடும் இரு மனைவிகள்!

சிறையிலிருக்கும் ஹரி நாடாரை சொந்தம் கொண்டாடும் இரு மனைவிகள்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தின் நடமாடும் நகைக்கடை என அழைக்கப்படும் ஹரி நாடார், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ளார். கடந்த 8 மாதங்களாக சிறையில் இருக்கும் அவரை வெளியே கொண்டு வரும் முயற்சியில் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு என்ற பெண் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமியைக் கண்டித்து வீடியோ ஒன்றை ஹரி நாடார் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார்.   அந்த வீடியோவில் விஜயலட்சுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக விஜலட்சுமி ஹரி நாடார் மீது புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் திருவான்மீயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் ஹரி நாடாரை போலீஸார் கைது செய்தனர்.   இதற்கிடையே ஹரி நாடார் ஒருங்கிணைப்பாளராக இருந்த பனங்காட்டுப் படை கட்சியிலிருந்து அ...
”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

”அய்யாதுரை”யாக அழைக்கப்பட வேண்டிய நான் ஸ்டாலின் ஆனது எப்படி? முதல்வர் சொன்ன ருசிகர தகவல்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், தமிழக அரசியல், நடிகர்கள்
  தமிழ் திரைப்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரும், திமுக தலைமை நிலைய செயலாளரும், தமிழ் நாடு வீட்டுவசதி துறை வாரியத்தலைவருமான பூச்சி முருகன் இல்ல திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அது ஒரு காரணப்பெயர். கம்யூனிச கொள்கை மீது கலைஞர் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதனால் தான் அவர் இறந்த நேரத்தில், நான் பிறந்த காரணத்தால் அவருடைய நினைவாக அந்த பெயரை எனக்கு சூட்டினார்கள். அந்த பெயரை சூட்டுவதற்கு முன்பு கலைஞர் அவர்கள் எனக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று நினைத்திருந்தால் என்று சொன்னால், எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து.  அய்யா என்றால் தந்தை பெரியார். துரை என்றால் அண்ணாவின் பெயருக்கு பின்னால் வரக்கூடிய துரை என்று வைக்க வேண்டும் என்று கருதி இருந்தா...
அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள்… விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

அடுத்தடுத்து மோதிக் கொண்ட கார்கள்… விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கிய புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எனினும், அவர் காயம் பெரிதாக எதுவுமின்றி நலமுடன் இருப்பது தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டின் மூத்த நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். நடிகர், தயாரிப்பாளர், விளம்பர மாடல், தொழிலதிபர், முதலீட்டாளர், ஆசிரியர், கொடையாளர், சமூக ஆர்வலர், அரசியல் பிரமுகர் மற்றும் தொழில்முறை உடற்கட்டு கலைஞர் போன்ற பல பரிணாமங்கள் இவருக்கு உண்டு. ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் பெரும் புகழ் பெற்ற இவர் இப்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியல்வாதியாக உள்ளார்     74 வயதாகும் அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள ப்ரென்ட்வுட்டின் சாலையில் அர்னால்டு விபத்தில் சிக்கியுள்ளார். தான் வைத்துள்ள GMC யூகோன் காரில் ஓட்டுநர் உடன் பயணித்துகொண்டிருந்த...
சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்த நடிகர்!

சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்த நடிகர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
    குடியரசு தினத்தை முன்னிட்டு 12 சுதந்திர போராட்ட வீரர்களாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகரின் புதுமையான முயற்சி இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 'கருங்காலி' மற்றும் 'நான் சிகப்பு மனிதன்' புகழ் நடிகர் சேத்தன் சீனு, 12 விடுதலை வீரர்களின் வேடங்களில் பிரமாண்ட போட்டோஷூட் செய்துள்ளார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட நாயகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக குடியரசு தினமான ஜனவரி 26 அன்று காலை 10.05 மணி முதல் இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்படும். ஜனவரி 23 முதல் முன்னோட்டம் வெளியிடப்படும். இந்த முயற்சியைப் பற்றி பேசிய சேத்தன் சீனு, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரியிடம் இந்த யோசனையை பற்றி கூறியதாக தெரிவித்தார். "இந்த முயற்சி ஒரு திரைப்படத்திற்காக தொடங்கப்பட்டது. சில சுதந்திர போராட்ட வீரர்களை திரையில் பிரதிபலிக்க நான் விரும்ப...
சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! சீன நாட்டில் வடமேற்கே அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. நில நடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 12-ம் தேதியும் குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஒரே மாதத்தில் குயிங்காய் மாகாணத்தில் 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது....
மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு!

மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி என குற்றச்சாட்டு! கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது கணவர் அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க தன்னை வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் தன்னை கொடுமை படுத்துவதாகவும் கூறியிருந்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தபெண்ணின் கணவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது கேரளாவில் சமூக வலைதளங்கள் மூலம் மனைவி மாற்றும் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும்,அதில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் உல்லாச விடுதிகளில் ஒன்று கூடி மனைவிகளை மாற்றி உல்லாசமாக இருப்பதாக கூறினார். இதற்காக கேரளாவை மையமாக கொண்டு 20 மேற்பட்ட குழுக்கள் செயல்பட்டு வருவதும், இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருப்...