ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

உண்மையை மறைத்து சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது – Ex CM கமல்நாத் கடும் விமர்சனம்

உண்மையை மறைத்து சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது – Ex CM கமல்நாத் கடும் விமர்சனம்

HOME SLIDER, NEWS, politics
சடலங்கள் மீது பாஜக அரசியல் செய்கிறது - Ex CM கமல்நாத் கடும் விமர்சனம் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதி, ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது இதற்கிடையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டதாக பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்தியபிரதேச முன்னாள் முதல்மந்திரியுமான கமல்நாத் இன்று கூறுகையில், மத்தியபிரதேசத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருந்து, தடுப்பூசி, ஆக்சிஜன், ஆபுலன்ஸ், படுக்கை வசதி என எதுவும் இல்லை. ஆனால், மாநில முதல்மந்திரி (சிவராஜ்சிங் சௌகான் - பாஜக) அனைத்தும் போதுமான அளவில் உள்ளது என்று கூறுகிறார். கொரோனாவின் இரண்டாவது அலை குறித்து தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் கடந்த...
ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் – உ.பி., அவலம்

ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் – உ.பி., அவலம்

HOME SLIDER, NEWS, politics
    ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்து செல்லாதீர்கள் போலீசார் முன் மண்டியிட்டு மன்றாடிய நபர் - உ.பி அவலம் உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனால், உ.பி.,யில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக பரவலான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், மாநிலத்தில் எந்த கொரோனா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்று உத்தரபிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் புரளியை பரப்பும் நபர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யவும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தனது அம்மா உயிர...
மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலி

மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலி

HOME SLIDER, NEWS, politics
  மராட்டியத்தில் நேற்று ஒரேநாளில் 985 பேர் கொரோனாவால் பலியானார்கள். இதனால் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வழிகின்றன மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படுமோசமாக அதிகரித்து வருகிறது. இந்த வகையில் நேற்றும் மராட்டியத்தில் புதிதாக 63 ஆயிரத்து 309 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் இதுவரை நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை 44 லட்சத்து 73 ஆயிரத்து 394 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல நேற்று ஒருநாளில் மட்டும் புதிய உச்சமாக கொரோனாவுக்கு உயிரிழப்பு 1,000-ஐ நெருங்கியது. அதன்படி 985 பேர் பலியானார்கள். இதன்மூலம் நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 214 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு பெருமளவு அதிகரித்து இருப்பதன் காரணமாக ஆஸ்பத்திரி பிணவறைகளில் உடல்களை வைக்க இடமில்லாத சூழல் நிலவுகிறது. மேலும் மயானங்கள் பிணக்குவியல்களால் நிரம்பி வருகின்றன. உடல...
மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
  மன்சூர்அலிகானுக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்கச் சென்ற நடிகர் மன்சூர் அலிகான், ஊடகங்களுக்கு ஆவேசமாக பேட்டி அளித்தார். தடுப்பூசியால் நன்றாக இருந்த நடிகர் விவேக் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது, சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி புகார் கொடுத்தார். இதுகுறித்து வடபழனி போலீசார் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு இன்று விசாரணை...
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி!

இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி!

HOME SLIDER, NEWS, politics
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,645 பேர் பலி! இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த தகவலின்படி இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பாதிப்பை விட 18297 அதிகம் ஆகும். மொத்த பாதிப்பு 1,83,76,524 ஆக உயர்ந்துள்ளது நேற்று ஒரே நாளில் 3645 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,...
கொரோனா விழிப்புணர்வு… ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் – வைரலாகும் வீடியோ!

கொரோனா விழிப்புணர்வு… ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் – வைரலாகும் வீடியோ!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு... ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலுக்கு நடனமாடிய கேரளா போலீஸ் - வைரலாகும் வீடியோ! இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வு பிரசாரங்களை மத்திய - மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் சமீபத்தில் வெளியாகி வைரலான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலை கொரோனா விழிப்புணர்வுக்காக பயன்படுத்தி உள்ளனர். இந்த பாடலுக்கு போலீசார் மாஸ்க் அணிந்தபடி நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர். கேரள போலீசாரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது டுவிட்ட...
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்!

ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
ரைசாவிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்கும் பெண் நிபுணர்! நடிகை ரைசா வில்சன் கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதளங்களில் முகம் வீங்கி இருப்பது போன்ற ஒரு படத்தை பதிவு செய்து மருத்துவர் பைரவி செந்திலிடம் எடுக்கப்பட்ட சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர் பைரவி செந்தில், ரைசா மூன்று நாட்களில் இது குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது மானநஷ்ட வழக்கை சந்திக்க நேரிடும் என்று நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். அதற்கு மற்றொரு நோட்டீஸ் மூலம் பதில் அளித்திருந்த ரைஸா, தனது முகத்திற்கு பைரவியின் சிகிச்சையால் தான் இப்படி ஆனது என்றும் அதற்கு ஈடாக ஒரு கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது மருத்துவர் பைரவி செந்தில் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’ரைசா இ...
தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்

தடுப்பூசி பெயரில் 1.25 லட்சம் கோடி கொள்ளை – திடுக் புகார்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். இது தொடர்பாக அக்கட்சியின் தமிழக செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்….. இந்தியாவில் இதுவரை எல்லாவிதமான தடுப்பூசி திட்டங்களும், அனைவருக்கும் இலவசமாகவே வழங்கப்பட்டது என்பதே வரலாறு. ஆனால் தற்போது கொரானாவைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிக்குக் கட்டணம் செலுத்தித் தான் பயனாளிகள் செலுத்திக் கொள்ள வேண்டுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, இந்திய மக்களின் உயிரோடு விளையாடுகிற கொடுமையான காரியம் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்தவமனைகளில் குறைந்த விலையிலும் கொரோனா தடுப்புசி செலுத்தி வரப்பட்டது. மத்திய அரசு 18 வயது முதல...
மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா!

மாஸ்க்… சமூக இடைவெளி தேவையில்லை – 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மாஸ்க்... சமூக இடைவெளி தேவையில்லை - 4000 பேருடன் பிரமாண்டமாக நடக்கும் இசை விருது விழா! இங்கிலாந்தின் மிக பிரபலமான இசை விழாவான ‘பிரிட் இசை விருது விழா’, வருகிற மே 11-ந் தேதி நடைபெற உள்ளது. இவ்விருது விழா, லண்டனில் உள்ள ‘ஓ2’ அரேனாவில் நடத்தப்பட உள்ளது. இதில் 4,000 பேர் கலந்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் இதில் கலந்து கொள்பவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு பின் பெரிய நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேரை அனுமதிக்கலாம் என்பதற்கு முன்னோட்டமாக இந்த விருது விழா நடைபெற உள்ளதாம். மேலும் இதில் கலந்து கொள்ள உள்ள 4,000 பேரில் 2,500 பேர் முன்களப் பணியாளர்கள் மற்றும் 1,500 பேர் கார்ப்பரேட் நிறுவனங்களை சேர்ந்தவர்களாவர். நிகழ்ச்சிக்கு முன்னதாக 4000 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்று ...
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!

குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்!

HOME SLIDER, NEWS, politics
குடிபோதையில் போலீஸ் வாகனத்தை கடத்தி லாரியில் மோதி நடுரோட்டில் கவிழ்த்த வாலிபர்! திருப்பூர் தெற்கு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் நேற்று மதியம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீஸ் வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்.பின்னர் மதியம் 1.45 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலக சந்திப்பு பகுதியில் உள்ள தெற்கு போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் அமர்ந்து போக்குவரத்து நெருக்கடி குறித்து போலீசாருடன் ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் ரோந்து செல்ல பயன்படுத்தும் போலீஸ் வாகனத்தை டிரைவரான போலீஸ்காரர் ராஜகுரு, அங்கு நிறுத்திவைத்திருந்தார். பின்னர் சாவியை வாகனத்தில் வைத்து விட்டு ராஜகுரு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகத்திற்கு சென்றதாக தெரிகிறது. சிறிது நேரம் கழித்து டிரைவர் திரும்பி வந்து பார்த்தபோது போலீஸ் வாகனத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்....