ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 8
Shadow

NEWS

ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?  காங்கிரஸ் எம்.பி. கேள்வி

ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?  காங்கிரஸ் எம்.பி. கேள்வி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?  காங்கிரஸ் எம்.பி. கேள்வி இந்தியாவில்  பாரத் பயேடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் சீரம்  கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, இரு தடுப்பூசிகளும் போடும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. முன்கள பணியாளர்களுக்கு  கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக போடப்படுகிறது. இந்த நிலையில், ஆட்சி செய்பவர்கள்  கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான மனிஷ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து  மனிஷ் திவாரி கூறியதாவது: அரசு பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாதது ஏன்?. பிற நாடுகளில் அரசின் சார்பில் பிரதமர்களும், சுகாதார அமைச்சர்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளும்போது இந்தியாவில் மட்டும் அரசுப் பிரதிநிதிகள...
புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடும் திமுக… முதல்வர் வேட்பாளர் இவர் தான்!

புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடும் திமுக… முதல்வர் வேட்பாளர் இவர் தான்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
புதுவையில் காங்கிரஸை கழற்றிவிடும் திமுக… முதல்வர் வேட்பாளர் இவர் தான்! தமிழகத்துடன் புதுச்சேரி யூனியன் பிரதேசமும் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இங்கு திமுக முன்னெடுக்கும் வியூகம் அரசியல் அரங்கை புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. ஆம், காங்கிரஸை கழற்றிவிட்டு அங்கு களம் காண இருக்கிறது திமுக. இதற்காக முதல்வர் வேட்பாளரையும் தயார் செய்துவிட்டது. தமிழகத்தின் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஜெகத்ரட்சகன் தான் திமுக தயார் செய்து வைத்திருக்கும் அந்த முதல்வர் வேட்பாளர்! சுமார் 11 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட அரக்கோணம் தொகுதியில் வெற்றி பெற்ற ஜெகத், அதைவிட சுமார் ஒரு லட்சம் வாக்குகள் குறைவாகக் கொண்ட மொத்த புதுவைக்கும் முதல்வர் ஆவது பெரிய காரியம் இல்லை என களம் இறங்கிவிட்டார். திங்கட்கிழமை பாண்டிச்சேரியில் திமுக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது...
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 12 காளைகள் அடக்கியவருக்கு கார் பரிசு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி 12 காளைகள் அடக்கியவருக்கு கார் பரிசு

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முனியாண்டி கோவில் காளை உள்பட 3 கோவில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கக்கூடாது என்பதால் காளையர்கள் ஓரங்கட்டி நின்றனர். அதன்பின் மாலை 5 மணி வரை ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. மொத்தம் 719 காளைகள் வாடிவாசல் வழியாக சீறிபாய்ந்தன; 700 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 மாடுகளை பிடித்த கண்ணன் என்ற வீரர் காரை பரிசாக வென்றார். 9 காளைகளை பிடித்த கருப்பணனுக்கு 2-வது பரிசும், 8 காளைகளை பிடித்த சக்தி என்பவருக்கு 3ம் பரிசும் வழங்கப்பட்டது....
வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுமதி!

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அனுமதி!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர்   சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. காட்பாடி சட்டமன்ற எம்எல்ஏவும்,  திமுக பொதுச்செயலாளருமான  துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (ஜன. 16) காலை 6.00 மணி அளவில் வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவர் வாயுத்தொல்லை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர் ஆனால், மூச்சுவிட சிரமப்பட்டதால் அவர் சிஎம்சியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு  எக்கோ(ECHO) பரிசோதனை உள்பட சர்க்கரை, ரத்த அழுத்தம், ஈசிஜி மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் துரைமுருக...
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜோ பைடன்

ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி – ஜோ பைடன்

HOME SLIDER, NEWS, politics, உலக செய்திகள், உலகம்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி - ஜோ பைடன் வைரஸ் தொற்றும் அதனால் நிகழும் மரணங்களும் மட்டுமல்லாமல் வேலை இல்லா திண்டாட்டமும் உச்சத்தில் உள்ளது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.‌ இதனிடையே தற்போதைய ஜனாதிபதி டிரம்பைவிட சிறப்பான முறையில் கொரோனா வைரஸ் பிரச்சனையைக் கையாளுவேன் என்ற பிரசாரத்தின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வருகிற 20-ந்தேதி பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தில் இருந்து அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க 1.9 லட்சம் அமெரிக்க டாலர் செலவிடுவதற்கான திட்டத்தை ஜோ பைடன் வெளியிட்டுள்ளார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.138 லட்சத்து 811 கோடியாகும். இந்த திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுக்குமானால், இதன் மூலம் ஒவ்வொரு அமெரிக்கரும் தலா 1,400 டால...
முதல்வர் பழனிசாமி -துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

முதல்வர் பழனிசாமி -துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  முதல்வர் பழனிசாமி -துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு! பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது. நேற்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இன்று மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுகளும் 650 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் காளைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்...
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி

HOME SLIDER, NEWS, politics, செய்திகள், நடிகர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்வையிட்ட போது அரசியல் பேசிய ராகுல்-உதயநிதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மதுரை வந்திருந்தார். அவரின் பயணத்தின் ஒரே நோக்கம் அவனியா புரம் ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசிப்பது மட்டுமே. டெல்லியிலிருந்து விமானத்தில் புறப்பட்ட ராகுல் காந்தி மதுரை வந்தார் ராகுல். அதன்பின் காரில் அவனியாபுரம் சென்ற ராகுல் அங்கே ஜல்லிக்கட்டைப் பார்த்து ரசித்தார். அப்போது பேசிய ராகுல், ‘இந்த விழாவில் இளைஞர்கள் கட்டுப்போப்பாகவும் பாதுகாப்பாவும் பங்கேற்பது மகிழ்ச்சி. நான் இங்கே வந்தது தமிழர் பண்பாட்டையும் வரலாற்றையும் அறிந்துகொள்ளவே’ என்று தெரிவித்தார். மாடு பிடி வீரர்கள் தடுப்பில் ஏறி ராகுல் காந்தியோடு போட்டோ எடுக்க முயன்றனர். பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களைத்தடுக்க என்றபோது ராகுல்காந்தி அதிகாரிகளைத் தடுத்து மாடு பிடி வீரர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டார்...
வருகிற 27-ந் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு!

வருகிற 27-ந் தேதி விடுதலையாகும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அமமுக ஏற்பாடு!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் வருகிற 27-ந் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அ...
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு : வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு : வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு : வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகள் மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் தொடங்கி நடைபெற்றது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையான நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்றது. இன்று 15-ந்தேதி மதுரை மாவட்டம் பாலமேடு மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.  ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து முதலில் கோவில் காளை சீற...
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டது. அந்தத் தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. அதனையடுத்து, டார்ச் லைட் சின்னத்தை விளம்பரப்படுத்தும் பணியில் கமல்ஹாசனும், மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் தீவிரமாக இறங்கினர். இதனைத்தொடர்ந்து டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னமாக மக்களிடம் இடம்பெற்றுள்ளது. இந்தநிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு மட்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு, தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனால் கமல் ஹாசன் கடும் அதிருப்தி அடைந்தார். டார்ச் லைட் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க உத்த...