எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் – அன்வர்ராஜா எம்.பி.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்பவர்கள்தான் அதிமுக கூட்டணியில் நீடிக்க முடியும் - அன்வர்ராஜா எம்.பி.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடப்பாடியில இன்று பிரச்சாரத்தை துவக்கி உள்ளார். இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எல்.முருகன் தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும் எனக் கூறினார். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பா.ஜ.க மேலிடம்தான் முடிவு செய்யும்எனக் கூறினார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அறிவித்து, பிரச்சாரத்தையும் முதலமைச்சர் துவங்கி விட்டார். இந்நிலையில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக கூறிவரும் பா.ஜ.க, முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தி...









