நம்ம திமுக & அதிமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் சொத்துப் பட்டியல்!!
எக்கச்சக்கமான சொத்துக்கள் கொண்ட மாநிலக் கட்சிகளில் சமாஜ்வாதி முதலிடத்திலும் திமுக, அதிமுக ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் வகிப்பதாக ஏடிஆர் அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சிகளின் சொத்து மதிப்பு, வேட்பாளர்கள் மீது உள்ள வழக்குகள் தேர்தல் மற்றும் அரசியல் சம்பந்தமான புள்ளிவிவரங்களை டெல்லியைத் தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்( Association for Democratic Reforms (ADR) என்னும் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் மாநில கட்சிகளின் சொத்துகளின் வரவு செலவு கணக்குகள் குறித்த புள்ளிவிவரங்கள் குறித்த ஆய்வறிக்கையை ஏடிஆர் அமைப்பு நேற்று வெளியிட்டுள்ளது. ஆம் ஆத்மி, திமுக, அதிமுக, சமாஜ்வாதி, தேமுதிக, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, சிவ சேனா உள்ளிட்ட 22மாநிலக் கட்ச...









