அமீத்ஷா நீங்கள் உள்துறை மந்திரி பொய் சொல்லாதீர்கள் – கடுப்பான மம்தா
அமீத்ஷா நீங்கள் உள்துறை மந்திரி பொய் சொல்லாதீர்கள் - கடுப்பான மம்தா
மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அனைத்து துறைகளிலும் மம்தா அரசு தோல்வி அடைந்துவிட்டது. நாட்டின் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, ஊழல், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றைத் தவிர மற்ற பல நிலைகளில் மேற்கு வங்காளம் பின்தங்கியுள்ளது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியதாவது:-
‘‘அமித்ஷாவுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் உள்துறை மந்திரி. உங்கள் கட்சிக்காரர்கள் கூறும் பொய்யான தகவல்களை அப்படியே தெரிவிப்பது உங்களுக்கு அழகல்ல.
அமித்ஷா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) நான் விரிவான பதில் அளிப்பேன். ஆனால் இன்று (நேற்று) இரண்டு விஷயங்களை மட்டும் பேசப்போகிறேன். தொழில்துறையில் மேற்கு வங்காளம் பூ...









