ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்!
தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.
அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர்.
ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்...
சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி - ஆஸ்திரேலிய அரசு அங்கீகாரம்!
ஆஸ்திரேலியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,465,811 உயர்ந்துள்ளது. கொரோனா தொடங்கியதிலிருந்து அந்நாட்டில் மொத்தம் 3,465 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பல நாடுகளில் காணப்படும் இறப்பு விகிதத்தை விட மிகக் குறைவு. இந்நிலையில் 16 மற்றும் 17 வயதுடைய சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய மருத்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டனில் சிறார்களுக்க பூஸ்டராகப் பயன்படுத்தப்படும் ஃபைசரின் தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியாவிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.ஒமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா மூன்றாவது அலையை தடுக்க மக்கள் பூஸ்டர் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நாடுகளில் ...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. குறுகிய கால இடைவெளியில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்
அரசியல் கட்சிகள் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் பணியில் சுறுசுறுப்பாகி விட்டன.
இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலில், விஜய் படம், விஜய் மக்கள் இயக்க கொடியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதாக
அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவுடன் முதன்முறையாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
கட்சி சார்பு இல்லாத ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறு...
கடலூரில் பழைய கட்டிடம் இடிந்து விபத்து: 2 சிறுவர்கள் பலி!
கடலூர் மாவட்டம் வண்டிக்குப்பம் பகுதியில் பழைய கட்டிடம் இருந்தது. இந்த கட்டடம் அருகே சிறுவர்கள் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயத்துடன் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் இடிபாடுகளை அகற்றி மேலும் சிறுவர்கள் சிக்கியுள்ளனரா? என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நடந்த கட்டிடம் இலங்கை அகதிகளுக்காக கட்டப்பட்ட பழைய குடியிருப்பாகும். யாரும் வசிக்காத நிலையில் கட்டிடங்கள் இருந்த நிலையில் தற்போது இடிந்து விழுந்துள்ளது....
தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு!
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையின்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் நிலையை பொறுத்து தளர்வுகளை அனுமதிக்கலாமா என சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இதில் பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்து 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க இந்த கூட்...
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
6,999 எம்.பி.பி.எஸ். மற்றும் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது.
நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5% இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
பொது பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஆன்லைன் கலந்தாய்வுக்காக www.tnhealth.tn.gov.in, மற்றும் https://tnmedicalselection.net இணையதள முகவரிகள் வெயிடப்பட்டுள்ளன...
நடிகர் ராதாரவி, டப்பிங் சங்கத்தில் பல கோடி முறைகேடு செய்திருப்பது விசாரணையில் அம்பலம்!
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் உத்திரவு ந.க.எண்.ஆ3/5281/2019 தேதி 10.01.2022
நடிகர் ராதாரவி டப்பிங் சங்கத்தில் பல விதங்களில் ஊழல் செய்திருப்பதாக அதன் உறுப்பினர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில்,
டப்பிங் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களான மயிலை S குமார், சிஜிமோல்,
V காளிதாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகத்திற்கு எதிராக ஒரு வழக்கை தொடர்ந்தனர்.
2019 ல் தொடர்ந்த அந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி S M சுப்பிரமணியம் அவர்கள்,
நடிகர் ராதாரவி தலைமை நிர்வாகம் டப்பிங் சங்கத்தில் செய்திருப்பதாக சாட்டப்பட்டிருக்கும் ஊழல் புகார்கள்
அனைத்தையும் தீர விசாரிக்கும் படி The Additional Registrar of Trade Unions – No. 1 cum Deputy C...
AIBCF, SRA, PAGAAM, BAMCEF, We The People மற்றும் LEAD INDIA ஆகிய அமைப்புகள் இணைந்து
“சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுதல் மற்றும் ஒருங்கிணைந்த தேசிய திட்டம்” என்ற தலைப்பிலான தேசிய இணையக் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் மகாராஷ்டிரா மாநில உணவு, நுகர்பொருள் வாணிபம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஷகன் சந்திரகாந்த் புஜ்பால், ஆந்திர மாநில கல்வித்துறை அமைச்சர் டாக்டர் ஆதிமுலப்பு சுரேஷ்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி. வில்சன், டெரிக் ஓ பிரையன், மனோஜ் குமார் ஜா, ஈ.டி. முகம்மது பஷீர்,
அலாகாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நீதியரசர் வீரேந்திர சிங் யாதவ், பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்,
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, PAGAAM நிறுவனர் சர்தார் தஜிந்தர் சிங் ஜல்லி, BAMCEF நிறுவனர் பி.டி. போர்க்கர், LEAD அமைப்பின் தல...