பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
பாலியல் புகார் சில்மிஷ சாமியார் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் பாய்ந்தது
தமிழகத்தில் பிரபலமான பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. முதலில் சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த புகார்கள், பின்னர் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் சென்று, விசாரணை நடைபெறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர்கள் போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில், தன்னை கடவுளின் அவதாரம் என கூறிக்கொண்டு ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வரும் சாமியார் சிவசங்கர் பாபா மீதும் பாலியல் புகார் கூறப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அவர் நடத்தி சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக...









