செவ்வாய்க்கிழமை, நவம்பர் 17
Shadow

NEWS

விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்ச ரூபாய் பரிசு போட்டி..!

விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு ஒரு லட்ச ரூபாய் பரிசு போட்டி..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை முன்னிட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம்  அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது. இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.   இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 31, 2019. இந்தப் போட்டிகள் குறித்த மேலதி...
மத்திய அரசின் நல திட்டங்களை மக்களுக்கு விளக்க ஜனவரியில் *நம்மவர்மோடி ரதயாத்திரை* மாநில ஒருங்கிணைப்பாளர் சுற்றுப்பயணம்..!

மத்திய அரசின் நல திட்டங்களை மக்களுக்கு விளக்க ஜனவரியில் *நம்மவர்மோடி ரதயாத்திரை* மாநில ஒருங்கிணைப்பாளர் சுற்றுப்பயணம்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  மத்திய அரசின் நல திட்டங்களை மக்களுக்கு விளக்க ஜனவரியில் *நம்மவர்மோடி ரதயாத்திரை* மாநில ஒருங்கிணைப்பாளர் சுற்றுப்பயணம்..! மத்திய அரசின் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை கிராமப்புற மக்களுக்கு தெரிவிக்க நம்மவர் மோடி ரத யாத்திரை ஜனவரியில் தமிழகம் முழுதும் நடை பெற உள்ளது. பிரதான் மந்திரி ஜன்கல்யான்காரி யோஜனா பிரசார் அபியான் சார்பில் நாடு முழுதும் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், பெண்களுக்கு சுய தொழில் செய்ய வங்கி கடனுதவி, சிறு தொழிலுக்கான முத்ரா கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலதிட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் & பாண்டிச்சேரி பகுதிக்கு ஒருங்கிணைந்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்களின் அறிமுக விழா சென்னையில் நடை பெற்றது. மாநில...
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் – நடிகர் சிவகுமார்

இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் – நடிகர் சிவகுமார்

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல் - நடிகர் சிவகுமார் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் 'கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்' உருவாக முக்கிய காரணம் 'கவிதாலயா' பாபு மற்றும் 'கவிதாலயா' பழனிசாமி இருவரும் தான். அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா பிரபலங்கள் பேசியதாவது:- நடிகர் சிவகுமார் பேசியதாவது, இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தய...
ஜனாதிபதி நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு..! தங்க பதக்கத்தை திருப்பி கொடுத்த மாணவி..!!

ஜனாதிபதி நிகழ்ச்சியில் அனுமதி மறுப்பு..! தங்க பதக்கத்தை திருப்பி கொடுத்த மாணவி..!!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 27 வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கினார். ஆனால் இந்த நிகழ்சியில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. அதாவது முதுநிலை பட்டபடிப்பில் தங்க பதக்கம் வென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமிய மாணவி ரபியா தலையில் ஹீஜாப் அணிந்து பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளார். அப்போது பாதுகாப்பு அதிகாரிகள் தலையில் அணிந்திருந்த ஹீஜாப்பை அகற்றினால் தான் அனுமதி என்று கூறியுள்ளனர். ஆனால் மாணவி ரபியா மறுப்பு தெரிவித்ததால், அவரை அரங்கத்துக்குள் நுழைய விடவில்லை. இதனால் மாணவி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். அதன்பிறகு பல்கலைக்கழகத்தில் 27 வது பட்டமளிப்பு விழா நிறைவு செய்துவிட்டு குடியரசுத் தலைவர் ராம்ந...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக…! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி… !!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மண்ணை கவ்விய பாஜக...! ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கூட்டணி... !! நவம்பர் மாதம் 30 தேதியிலிருந்து டிசம்பர் 20-ம் தேதிவரை மொத்தம் ஐந்து கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. வெறும் 81 தொகுதிகளைக் கொண்ட அம்மாநிலத்தில் மிகுந்த பாதுகாப்போடு தேர்தல் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று 23.12.2019 வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டன. ஆரம்பம் முதலே  காங்கிரஸ் ஜார்கண்ட முக்திமோட்சா கூட்டணியும், பா.ஜ.க.வும் மாறி, மாறி முன்னிலை வகித்தன. இறுதியில் காங் கூட்டணி 46 தொகுதிகளிலும் 24 தொகுதிகளை பா.ஜ.க.வும் வென்றது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் முதல்வர் வேட்பாளராக சிபுசோரனின் மகன் ஹேமந் சோரனும், பா.ஜ.க. சார்பாக சிட்டிங் முதல்வர் ரகுபார் தாஸிம் களம் கண்டனர். அதில்  ஹேமந்த் அவர் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வென்றார். அதே நேரத்த...
ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக முதல்வர் ஒரு கோடி வழங்கினார்..!

ஹூஸ்டன் பல்கலை கழகத்தில் தமிழ் இருக்கை அமைய தமிழக முதல்வர் ஒரு கோடி வழங்கினார்..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றும், உலகம் முழுவதும் 7 கோடி மக்களுக்கும் அதிகமானோர் பேசும் மொழியுமான தமிழை அனைவரும் படிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த இருக்கையை அமைப்பதற்காக கடந்த ஆண்டு ‘ஹூஸ்டன் தமிழ் இருக்கை’ என்ற தொண்டு நிறுவனம் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலையை, ஹுஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பின் தலைவர் சாம் கண்ணப்பன் அவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்....
குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் பேரணி..!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக கூட்டணி கட்சிகள் பேரணி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடைபெற்றது. இது பேரணி அல்ல ,போர் அணி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூரில் தொடங்கிய திமுக கூட்டணி கட்சிகளின் பேரணி ராஜரத்தினம் மைதானத்தில் நிறைவு பெற்றது.இந்த பேரணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ப.சிதம்பரம்,திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,விசிக தலைவர் திருமாவளவன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.இதன் பின்பு ராஜரத்தினம் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் தலைவர்கள்...
டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம்  விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

டாப் 100 இடங்களில் முதலிடம் விராட்கோலி , ரஜினிக்கு 13ம் இடம் விஜய்,அஜீத்,தனுஷ் இடம் பிடித்தனர்..!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  இந்திய அளவில் 2019-ம் ஆண்டில் டாப் 100 இடங்களில் உள்ள பிரபலங்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆண்டுதோறும் ஊதியம் மற்றும் மக்களிடம் வரவேற்பை பெற்றதன் அடிப்படையில் டாப் 100 இடங்களை பிடிக்கும் பிரபலங்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய அளவில் இந்த ஆண்டுக்கான 100 பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், இந்திய அணியின் கேப்டன் கோலி முதலிடத்தில் உள்ளார். மற்றொரு கிரிக்கெட் வீரர் தோனி 5-வது இடத்திலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 9-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் இந்தியா வரலாற்றில் ஒரு கிரிக்கெட் வீரர் டாப் 100 பிரபலங்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல்முறையாகும். இதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களான ரிஷப் பண்ட் (30வது இடம்), ஹர்திக் பாண்டியா (3...
ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ப்ரமோஸ் ஏவுகணையின் பாகம் கரை ஒதுங்கியது.* *கடலூர் அருகே தாழங்குடா பகுதியில் ப்ரமோஸ் ஏவுகணையின் ஒருபாகம் கரை ஒதுங்கியதால் பரபரப்பு.* * கரை ஒதுங்கி உள்ள ஏவுகணையின் பாகம் பெரிய பந்து வடிவில் உள்ளது.*
விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

விக்ரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு 90 வயது பாட்டி போட்டி..!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து அணைத்து ஊராட்சிகளிலும் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 90 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சுமார் 5000 வாக்குகள் கொண்ட இந்த ஊராட்சியில் இதுவரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே தலைவர்களாக இருந்துவருகின்றனர். கனகவல்லியின் கணவர் அழகேசபூபதி நான்கு முறையும், இவர்களது மகன் பார்த்தசாரதி இரண்டுமுறையும் தலைவர்களாக இருந்துள்ளனர். தற்போது போட்டியிடும் கனகவல்லியும் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை ஊராட்சிமன்ற தலைவராக இருந்துள்ளார். தற்போது இந்த தொகுதி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் மீண்டும் தலைவர் பதவிக்கு போ...