சனிக்கிழமை, நவம்பர் 7
Shadow

NEWS

24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
24 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை தட்டிச் சென்ற கார்த்திக்! மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் நடத்தப்பட்டது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மீடுபிடி வீரர்கள் பிடித்து விதவிதமான பரிசுகளை வென்றனர். இதேபோல் வீரர்களின் பிடியில் சிக்காமல் போக்கு காட்டிய காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மொத்தம் 7 சுற்றுகளாக வீரர்கள் களமிறக்கப்பட்டு, காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அடுத்தடுத்த  சுற்றுக்கு முன்னேறினர். இதில் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர் களத்தில் நீண்டநேரம் களத்தில் நின்று காளைகளை அடக்கி முதலிடத்தல் இருந்தார். அவரைத் தொடர்ந்து அவனியாபுரம் கார்த்திக் இரண்டாவது இடத்தில் பின்தொடர்ந்தார் பிற்பகலுக்குப் பிறகு முதலிடத்தை ...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 5வது சுற்று நிறைவு! தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் பொங்கல் பண்டிகை அன்று தொடங்கி பல்வேறு ஊர்களில் தொடர்ந்து நடைபெறும் இதில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்று நடைபெறும். இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7.30 மணிக்கு ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியை அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்றன. போட்டி முழுவதும் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடைபெறுக...
கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

HOME SLIDER, NEWS, செய்திகள்
  கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து கேரள அரசு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது....
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம்! சபரிமலை ஐயப்பன் கோயிலில் தற்போது மகரவிளக்கு கால பூஜைகள் நடந்து வருகின்றன.இன்று பிரசித்திபெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதிதரிசனமும் நடக்கிறது. இந்த பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று மதியம் ஊர்வலமாக புறப்பட்டது. திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட அய்யப்ப பக்தர்கள் தலைச்சுமையாக எடுத்துச் சென்றனர் பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் இன்று மாலை 6.20 மணிக்கு சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். தொடர்ந்து பதினெட்டாம் படி வழியாக கொண்டு செல்லப்படும் திருவாபரணங்களை தந்திரியும், மேல்சாந்த...
கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை

கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் – இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா 2வது அலையை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்படும் - இந்தியாவை எச்சரிக்கும் ஐ.நா.சபை சர்வதேச அளவிலான கொரோனா பாதிப்பு குறித்து ஐ.நா.சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவில்,டெல்டா வைரஸ் பரவலால் உருவான 2வது அலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 2,40,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்திய பொருளாதாரத்தை 2வது அலை சீர்குலைத்தது. கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் இந்திய மருத்துவமனைகள் அனைத்தும் முடங்கின. இதேபோன்ற பாதிப்பு விரைவில் நடக்கக் கூடும் மிகவும் வேகமாக பரவக்கூடிய ஒமைக்ரான், மனித சமுதாயத்திற்கும்,  பொருளாதாரத்திற்கும் மீண்டும் பாதிப்பை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையில், இறப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்தது. நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பிற்கு சுமையாக இருந்தது.  உலக...
2 ஆயிரம் போலீஸ்… ஏராளமான கண்காணிப்பு கேமாரா… 150 பார்வையாளர்களுடன் தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

2 ஆயிரம் போலீஸ்… ஏராளமான கண்காணிப்பு கேமாரா… 150 பார்வையாளர்களுடன் தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
2 ஆயிரம் போலீஸ்... ஏராளமான கண்காணிப்பு கேமாரா... 150 பார்வையாளர்களுடன் தொடங்கிய அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! அவனியாபுரம் பகுதியில் 20 இடங்களில் போலீசார் தடுப்பு அமைத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் மதுரை அவனியாபுரத்தில் இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். ஆன் லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 300 மாடுபிடி வீரர்களும், 700 காளைகளும் பங்கேற்பு மாடுபிடி வீரர்களுக்கும், காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லாத சான்றிதழ் கட்டாயம் போட்டி தொடங்கும் முன்பாகவே அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்த பின்னரே களத்திற்குள் அனுமதிக்கப்படுவர் போட்டியில் கல...
திவாலாகும் நிலை… சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்…!

திவாலாகும் நிலை… சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்…!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
திவாலாகும் நிலை... சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்...! கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு உலக நாடுகளும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்தன... சந்தித்துவருகின்றன. மருத்துவத்துக்கும் தடுப்பூசிகளுக்கும் பெருந்தொகையை ஒதுக்கின. கொரோனவால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரச் சிக்கல்கள் உலகம் முழுவதுமே ஏற்பட்டிருந்தன. அதிலும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாடு திவாலாகும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது. ஏற்கனவே பல்லாயி...
மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்!

மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்! முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கொரோனா நடைமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா?

சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா?

HOME SLIDER, NEWS, செய்திகள்
சேவல் சண்டை நடத்த அனுமதி கிடைக்குமா? பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரிய வடமலைபாளையம் கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிபந்தனைகளுடன் பரிசீலிக்க மாவட்ட காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஜனவரி 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஈரோடு மாவட்டம், பெரியவடமலைபாளையம், ஜம்பை கிராமத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கும்படி, பவானி டி.எஸ்.பி.க்கும், காவல் ஆய்வாளருக்கும் உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம் மற்றும் வி.சிவஞானம் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரின...
நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

நீதிபதி சந்துருவுக்கு “அம்பேத்கர் விருது”, திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தந்தை பெரியார் விருது தமிழக அரசு அறிவிப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள், தமிழக அரசியல்
  தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அம்பேத்கர் விருது முன்னாள் நீதிபதி சந்துருவுக்கும், தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதினை வழங்கி கௌரவித்துவருகிறது. அந்தவகையில் 2021-ம் ஆண்டுக்கான சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான திருநாவுக்கரசுக்கு வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதேபோன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக அரும்பாடுபட்டுவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் தமிழ்நாடு அரசு விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் 2021...