புதன்கிழமை, அக்டோபர் 14
Shadow

திவாலாகும் நிலை… சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்…!

திவாலாகும் நிலை… சீனாவுக்கு கடனை அடைக்க இந்தியாவிடம் 1 பில்லியன் கடன் கேட்டு கையேந்த இலங்கை திட்டம்…!

கொரோனா பெருந்தொற்றால் பல்வேறு உலக நாடுகளும் நிதி நெருக்கடிகளைச் சந்தித்தன… சந்தித்துவருகின்றன.

மருத்துவத்துக்கும் தடுப்பூசிகளுக்கும் பெருந்தொகையை ஒதுக்கின. கொரோனவால் ஏற்பட்ட வேலைவாய்ப்பின்மை, வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றால் பொருளாதாரச் சிக்கல்கள் உலகம் முழுவதுமே ஏற்பட்டிருந்தன.

அதிலும் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில், நாடு திவாலாகும் அளவுக்கான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன

குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பியிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

விலைவாசி விண்ணை முட்டும் அளவில் உள்ளது.

ஏற்கனவே பல்லாயிரக்கணக்கான கோடிகளை இலங்கை அரசுக்கு கடனளித்திருக்கிறது சீனா. அதுபோக, சில சர்வதேச வங்கிகளிடமும் கடன்பெற்றிருக்கிறது அந்த நாடு. இதன் காரணமாக  நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் கண்டுவரும் நிலையில், கடனை எப்படி அடைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடிவருகிறது இலங்கை.

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை, இந்தியாவிடம் 1 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில்  சுமார் 73 ஆயிரம் கோடி கடன் உதவியை கோர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் அஜித் நிவார் கப்ரால்  இது பற்றி கூறுகையில், சரக்கு இறக்குமதி செய்ய இந்தியாவிடம் ஒரு பில்லியன் டாலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  உணவு பொருள் இறக்குமதிக்காக  மட்டும் இந்த தொகை செலவிடப்படும்.  இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்துவதை மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனாவிடம் இருந்து மற்றொரு கடனைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எனினும், கடன் தொகை இன்னும் முடிவு செய்யப்படவில்லை” என கப்ரால் கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன